போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்(07.09.2026) வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து பொதுமக்கள்,இளைஞர்கள் மற்றும் மாணவ/மாணவியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் "போதைப்பொருளுக்கு இல்லை - ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஆம்“ என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, “I AM AGAINST DRUGS SAY NO TO DRUGS, SAY YES TO LIFE” என்ற விழிப்புணர்வு போதைப் பொருள் தொடர்பான புகார்களை தெரிவிக்க பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் Drug free tamilnadu என்ற செயலியை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம், 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம் என்ற பதாகைகள் வெளியிடப்பட்டது.
மேலும், போதைப்பொருள் பயன்பாடு தனிநபரின் உடல்நலம் மற்றும் குடும்ப நலனுக்கு மட்டுமின்றி சமூகத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடியது. எனவே, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், மாணவர்கள்/இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முழுமையான அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே, போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து மேற்கண்ட செயலி மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்க்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் புகார் அளிக்கும் நபர்கள் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, உதவி ஆணையர்(கலால்) திரு.சு.சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி ப்ரிதௌஸ் பாத்திமா, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply