25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியா ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில்  10 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில்  10 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்தது.

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் வங்கதேசத்தின் தாகாவில் ,பெண்களுக்கான தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு பைனலில் இந்தியாவின் அங்கிதா பகத், பாரிஸ் ஒலிம்பிக்கில்வெள்ளி வென்ற தென் கொரியாவின் நாம் சுஹி யோன் மோதினர். அங்கிதா 7-3 (29-27, 26-26, 26-28, 29-28, 29-28) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.

இந்தியாவின் தீபிகா குமாரி, சங்கீதா வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதினர். இப்போட்டி 5-5 (28-28, 28-23, 28-26, 28-29, 28-29) என சமநிலை வகித்தது. பின் 'ஷூட் ஆப்' முறையில் அசத்திய சங்கீதா 6-5 என வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.

இந்தியாவின் திராஜ், ராகுல் ஆண்களுக்கான தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு பைனலில் மோதினர். இதில் திராஜ் 6-2 (28-28, 29-26, 28-28, 28-26) என வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினார். ராகுல்வெள்ளி வென்றார்.

இத்தொடரில் 6 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 10 பதக்கம் கைப் பற்றிய இந்தியா முதலிடம் பிடித்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *