சர்வதேச திறன் போட்டித்தேர்விற்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றிட மாவட்ட அளவிலான திறன் போட்டித் தேர்வுகள் நடைபெறவுள்ளது.
2026-2027 ஆம் ஆண்டிற்கான தேசிய மற்றும் சர்வதேச அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த திறமையான இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக திறன் போட்டிகள் நடை பெறவிருக்கிறது. விருப்பமுள்ள மாணவ, மாணவியர் https://www.skillindiadigital.gov.in/account/register?returnUrl=%2Findia-skills-%20competition என்ற இணையதளம் வாயிலாக வரும் 15-09-2026 வரை பதிவு செய்யலாம்.
ஐடிஐ, பாலிடெக்னிக், இன்சினீயரிங் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். கடந்த 2025-2026 ஆம் ஆண்டு தெற்கு மண்டல போட்டிகளில் தமிழகம் முதலிடம் பிடித்து, 30 தங்கம், 32 வெள்ளி, 29 வெண்கலம் மற்றும் 17 சிறப்பு பதக்கங்கள் என மொத்தம் 108 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
எனவே, சர்வதேச திறன் போட்டிகளில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply