சீனாவில் வெள்ள மீட்பில் அசத்திய 'மிதக்கும் பாலம்'.
சீனாவின் குவாங்சி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், ஒரு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற, சீன மீட்புப் படையினர் 'மிதக்கும் பாலம்' (Floating Bridge)தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர்.
ஒரே நேரத்தில் சுமார் 300 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்த அமைப்பு மூலம், வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். இந்த மீட்புப் பணி உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
0
Leave a Reply