லவ்லினாவுக்கு பதக்கம் உறுதி... நேரடியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் ஐந்து வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றதால், லவ்லினாவுக்கு முதல் சுற்றில் 'பை' வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இந்தியா சார்பில் மொத்தம் 14 குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கின்றனர்.
0
Leave a Reply