25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கடந்த 45 ஆண்டுகளில் தான் நடித்த 156 படங்களில் இடம்பெற்ற 537 பாடல்களில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்தியதற்காக, கின்னஸ் சாதனை விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகர் அமீர்கான் கலந்து கொண்டு சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனை விருது சான்றிதழை வழங்கினார். அவர் பேசும்போது நான் சிரஞ்சீவியின் ரசிகன். அவர் எல்லா பாடல்களிலுமே திறமையாக ஆடி இருப்பார். கஷ்டமான நடன அசைவுகளில் கூட எளிதாக ஆடிவிடுகிறார். அதுதான் அவரது தனித்துவமான திறமை என்றார். I

சிரஞ்சீவி பேசும்போது எனது திரையுலக வாழ்க்கையில், நடனம் முக்கிய அங்கமாக இருந்தது. நடிப்பைவிட நடனத்தில் தான் அதிக ஆர்வம் இருந்தது. கின்னஸில் இடம்பிடித்தது பெரிய கவுரவம் என்றார். சிரஞ்சீவி 1978-ல்  “புனாதிரல்லு ”என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார். தெலுங்கு தாண்டி தமிழ், இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News