உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் ....
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் எகிப்தின் கெய்ரோவில் ,ஆண்களுக்கான 'ரைபிள் 3' பொசிசன்ஸ் பிரிவில் தகுதிச்சுற்று நடந் தது. இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங், 'நீலிங்' (200), 'புரோன்' (200) பிரிவில் முழு புள்ளி பெற்றார். அடுத்து 'ஸ்டாண்டிங்' பிரிவில் (197) மொத்தம் 597 புள்ளி பெற்று, முதலிடம் பெற்றார். உலக சாதனையை சமன் செய்தார்.
மற்றொரு இந்திய வீரர் நீரஜ் குமார் (592) 5வது இடம் பெற, இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.
பைனலில் ஐஸ்வரி பிரதாப் சிங் (466.9) 0.2 புள்ளி வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை நழுவவிட்டார். சீனாவின் யுகுன் லியு (467.1) தங்கம் வென்றார். நீரஜ் (432.6) 5வது இடம் பிடித்தார்.
இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என, 11 பதக்கத்துடன் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா நீடிக்கிறது.
0
Leave a Reply