25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலக துப்பாக்கி சுடுதலில் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என, 9 பதக்கங்கள் கைப்பற்றிய இந்தியா  2வது  இடத்துக்கு முன்னேறியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக துப்பாக்கி சுடுதலில் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என, 9 பதக்கங்கள் கைப்பற்றிய இந்தியா  2வது  இடத்துக்கு முன்னேறியது.

எகிப்தில், உலக துப் பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்'/'பிஸ்டல்') தொடர் எகிப்தில், ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் சாம்ராட் ராணா (586.27 புள்ளி),  வருண் தோமர்(586.26) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.

பைனலில் சாம்ராட், 243.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றார் . மூன்றாவது இடம் பிடித்த வருண் (221.7) வெண்கலம் கைப்பற்றினார்.  

10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் ஆண்கள் அணிகளுக்கான ,சாம்ராட், வருண், ஷர்வன் குமார் அடங்கிய இந்திய அணி 1754.69 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, தங்கம் வென்றனர்.  

 25மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' ஆண்களுக்கான பைனலில், அனிஷ், 28 புள்ளிகளு டன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் பெண்கள் அணிகளுக்கான ,ஈஷா சிங் (583.25), மனு பாகர் (580.20), சுருச்சி இந்தர் சிங் (577.17) அடங்கியஇந்திய அணி 1740.62 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News