ஒடிசாவின் புவனேஸ்வரில்78 வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி .
78 வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசாவின் புவனேஸ்வரில் பெண்களுக்கான 1500 மீ., பிரீஸ்டைல் போட்டியில் டில்லி வீராங்கனை பாவ்யா, 17 நிமிடம்,35.07 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2015ல் மாளவிகா, 17 நிமிடம், 39.16 வினாடியில் கடந்து இருந்தார்.
பெண்களுக்கான 200 6. பிரீஸ்டைல் கர்நாடகாவின் தினிதி தேசிங்கு, தனது முந்தைய (2:03.24) சாதனையை தகர்த்து, 2 நிமிடம், 02.97 வினாடியில் வந்து தங்கம் வென்றார். டில்லியின் பாவ்யா (2:07.45), மகாராஷ்டிராவின் அதித்தி (2:07.55) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
தனிநபர் மெட்லே போட்டியில் ,ஆண்களுக்கான 200 மீ., கர்நாடகாவின் ஷோகன் கங்குலி, 2 நிமிடம், 04.34 வினாடியில் வந்து தங்கம் கைப்பற்றி, புதிய சாதனை படைத்தார்.
0
Leave a Reply