25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Mar 10, 2025

தேசிய மாஸ்டர்ஸ் தடகளத்தில் தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 45 வது சீசன் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் நடந்தது.தமிழகத்தில் இருந்து 440 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தில் (45 வயது பிரிவு) மயில் வாகனன் (போதைப் பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.,), சுரேஷ், ராஜேஷ், மோகன்குமார் இடம் பெற்ற தமிழக அணி தங்கம் கைப் பற்றியது.பெண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் (45 வயது பிரிவு) அருள்மொழி  சுகன்யா ரவிச்சந்திரன், ஸ்ரீலேகா, பிந்து கணேஷ் இடம் பெற்ற தமிழக அணி தங்கம் வென்றது.35 வயதுக்கு மேற் பட்டோருக்கான பிரிவில் தமிழகத்தின் ஜேசு எஸ்தர் ராணி, 4x400 மீ., தொடர் ஓட்டம், 4X100 ., தொடர் ஓட்டத்தில் தங்கம் கைப்பற்றிய அணியில் இடம் பெற்றார். தவிர 'டிரிபிள் ஜம்ப்' போட்டி யில் வெள்ளி, நீளம் தாண்டுதலில் வெண்கலம் கைப்பற்றினார். 

Mar 10, 2025

சர்வதேச , பாரா தடகள கிரான்ட்ப்ரீ தொடர் டில்லியில் இன்று துவக்கம்

, பாரா தடகள கிரான்ட்ப்ரீ தொடர், டில்லி நேரு விளையாட்டு அரங்கில், இந்தியாவில் முதல் முறையாக இன்று துவங்குகிறது. மூன்று நாள் நடக்கும் தொடரில், பாரா வீல் சேர் ரேசிங், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்க உள்ளன. 18 நாடுகளைச் சேர்ந்த 283 பாரா வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்னர். இந்தியா சார்பில் 167 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.தமிழகம் சார்பில் ரமேஷ், கீர்த்திகா உட்பட 12 பேர் கலந்து கொள் கின்றனர். இவர்களுக்கு தலா 65,000 ரூபாய் வீதம், 10.40 லட்சம் ரூபாய் நிதி தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவி வழங்கி உள்ளது. 

Mar 09, 2025

இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராபி வென்றது. இந்தியா கிரிக்கெட் ஆர்வலர்கள் கொண்டாட்டம்.

நேற்று நடந்த பைனலில், உல கின் 'நம்பர்-1' அணியான இந் தியா, நியூசிலாந்தை (நம்பர்-4) எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், 'பேட்டிங்' தேர்வு செய்தார். காயம் அடைந்த மாட் ஹென்றிக்கு பதில் நாதன் ஸ்மித் இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50  ஓவரில் 7 விக்கெட்டுக்கு 251 ரன் எடுத்தது. இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்து *வெற்றி பெற்று, சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. ஐ.சி.சி., அரங்கில், இந்திய அணி 7வது முறை கோப்பை வென்றது. நேற்று 3வது முறையாக (2002, 2013,2025) சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்தியா, தலா 2 உலக கோப்பை (1983, 2011), 'டி-20' உலக கோப்பை (2007, 2024) கைப்பற்றியதுஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா. இதுவரை 3 முறை (2002, 2013, 2025) சாம்பியன் ஆனது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா (2006, 2009) உள்ளது. தென் ஆப்ரிக்கா (1998), நியூசிலாந்து (2000), இலங்கை (2002), வெஸ்ட் இண்டீஸ் (2004), பாகிஸ்தான் (2017) தலா ஒரு முறை கோப்பை வென்றன. இதில் 2002ல் இந்தியா, இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. சாம்பியன்ஸ் டிராபி பைனலில் வென்ற இந்தியா அணிக்கு கோப்பையுடன், ரூ. 19.49 கோடி சன், பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த நியூசி லாந்து அணி ரூ. 9.74 கோடி பரிசு பெற்றது. பாகிஸ்தான், துபாயில் சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. இதன் 10வது சீசன், வரும் 2029ல் இந்தியாவில் நடக்க உள்ளது.

Mar 09, 2025

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன்

 நேற்று, இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன், சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இது, நடப்பு சீசனில் சென்னை அணி பங்கேற்ற கடைசி போட்டி. ஆடிய சென்னை அணி5-2 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது. சென்னை அணி சார் பில் டேனியல் சிமா (25, 90+6வது நிமிடம்), இர்பான் யாத்வாட் (57, 90வது) தலா 2, லுாகாஸ் பிரம்பில்லா (45 + 3வது) ஒரு கோல் அடித்தனர். ஜாம்ஷெட்பூர் அணிக்கு ரீ டச்சிகாவா (18வது நிமிடம்), முகமது சனான் (62வது ) தலா ஒரு கோல் அடித்தனர்.சென்னை அணி 24 போட்டியில், 7 வெற்றி, 6 'டிரா', 11 தோல்வி என 27 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது.

Mar 07, 2025

'பாரா' தடகளகிராண்ட் பிரிக்ஸ் பிரவீன் பங்கேற்பு

 டில்லியில், வரும் மார்ச் 11,13ல்மாற்றுத்திறனாளி களுக்கான உலக'பாரா' தடகளகிராண்ட் பிரிக்ஸ் தொடர்,. முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்படும்,இத்தொடரில்,20 நாடுகளை சேர்ந்த,250க்கும் மேற்பட்ட 'பாரா'விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.இந்தியா சார்பில், பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமார் (உயரம் தாண்டு தல், 'டி64'), நவ்தீப் சிங் (ஈட்டி எறிதல், ‘எப்41'), தரம்பிர் ('கிளப் த்ரோ', 'எப்51') உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். தரம்பிர் கூறுகையில், சிறப்பாக செயல்பட்டு, இந்தியாவுக்கு பெருமை தேடித்தர முயற்சிப்பேன்,” ,"சொந்த மண்ணில் உலக 'பாரா' தடகளம் நடக்க இருப்பது இந்திய நட்சத்திரங்களுக்கு,. நீண்ட நாள் கனவுநிறைவேறியது..

Mar 07, 2025

மாஸ்டர்ஸ் பாட்மின்டன் அரையிறுதிக்குள் நுழைந்த ஆயுஷ்

பிரான்சில், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, டென்மார்க் கின்ராஸ்மஸ் கெம்கே மோதினர். முதல் செட்டை 21,16 எனக் கைப்பற்றிய ஆயுஷ், இரண்டாவது செட்டை 21-23 என போராடி இழந்தார்.வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்டஆயுஷ் 21-17 என வென்றார்.ஒரு மணி நேரம். 21 நிமிடம் நீடித்த காலிறுதியில் அசத்திய ஆயுஷ் 21,16,/21,23/,21,17 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Mar 07, 2025

உலக சாம்பியன்' ஜூனியர்' செஸ் தொடரில்  பிரனவ்.

 சர்வதேசசெஸ்கூட்டமைப்பு(பிடே)சார்பில்20வயதுக்குட்பட்டோருக்கான உலகஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர்,மான்டினிகிரோ வில் நடந்தது. ஓபன் பிரிவில் மொத்தம் 157 பேர்பங்கேற்றனர். இந்தியா சார்பில் 18 வயதுபிரனவ் வெங்கடேஷ், பிரனீத், அஷ்வத் உள்ளிட்டோர் களமிறங்கினார்.   பிரனவ். போட்டியின் 18வதுநகர்த்தலில் 'டிரா'செய்தார். இதையடுத்து 11சுற்றில் 7 வெற்றி,4'டிரா'செய்த பிரனவ்,9.0 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து, உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆனார். உலக ஜூனியர் செஸ்சாம்பியன் தொடரில் இந்தியாவின் ஆனந்த்(1987),ஹரிகிருஷ்ணா(2004),அபிஜீத் குப்தா(2008) கோப்பை வென்றனர். தற்போது 17 ஆண்டுக்குப் பின், இந்திய வீரர் பிரனவ் இத்தொடரில் சாம்பியன் ஆனார். 

Mar 07, 2025

செக்குடியரசில் பிராகு மாஸ்டர்ஸ் செஸ்: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பிராகு மாஸ்டர்ஸ் செஸ்தொடரில்,இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரிஉள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். இதன்9வதுசுற்றில்தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம், துருக்கியின் எடிஸ் குரேல் மோதினர்.. இப்போட்டி 39வது நகர்த்தலின் போது'டிரா' ஆனது.மற்றொரு போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். இதில் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 40வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். ஒன்பது சுற்றுகளின் முடிவில் 3 வெற்றி,6 'டிரா' என6.0 புள்ளிகளுடன் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.   

Mar 06, 2025

கிரிக்கெட் பைனலில் 25 ஆண்டுக்கு பின் மோதல் நியூசிலாந்து, இந்தியா

துபாயில் வரும் மார்ச் 9 நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் ரோகித் சர்மா தலைமை யிலான இந்திய அணி, சான்டனர் வழிநடத்தும் நியூசிலாந்தை எதிர்  கொள்கிறது.  பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுகிறது.இதுபற்றி நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் கூறுகையில், 'துபாயில் மட்டும் விளையாடுவதால், இங்கு எப்படி செயல்பட வேண்டுமென இந்தியாவுக்கு தெளிவாக தெரியும். தற்போது இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது. பைனலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்," என்றார். 

Mar 06, 2025

விளையாட்டு போட்டிகள் MARCH 7TH

குத்துச்சண்டைகிரேட்டர் நொய்டாவில் (உ.பி.,)மார்ச் 21-27ல் தேசிய சாம்பியன்ஷிப் , 'நடப்பு சாம்பியன்' ரயில்வேஸ் உட்பட 300க்கு மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். செஸ்  செக்குடியரசில், பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடரில், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ்கிரி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர்.இதன் 7வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, சீனாவின் யி வெய் மோதி, 61வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். அரவிந்த், 39வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஏழு  சுற்றுகளின் முடிவில் தமிழகத்தின் அரவிந்த், 5.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா, 4.5 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். பாட்மின்டன் பிரான்சில் சர்வதேச பாட்மின்டன் தொடர் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் 19 இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி (48வது இடம்), முன்னாள் உலக சாம்பியன், உலகின் 'நம்பர்-12' ஆக உள்ள, சிங்கப்பூரின் லோகியான் இயுவை எதிர்கொண்டார்.முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய ஆயுஷ், அடுத்த செட்டை 21-9 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் ஆயுஷ் 21-17, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றில் ஆயுஷ் ஷெட்டி, 21–17, 21-17 என ஹாங்காங்கின் குனவானை வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.  டென்னிஸ்செக்குடியரசின் கேத்ரினா சினியகோவா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினாவின் மரியா கார்லியை அமெரிக்காவில் நடக்கும் இந்தியன் வெல்ஸ் ஓபன் முதல்சுற்றில் வீழ்த்தினார். கிரிக்கெட்இந்தியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகள்இலங்கையில், பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் (ஏப். 27- மே 11, இடம்: கொழும்பு)  பங்கேற்கின்றன. 

1 2 ... 154 155 156 157 158 159 160 ... 171 172

AD's



More News