25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கிறிஸ்டி கவன்ட்ரி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிறிஸ்டி கவன்ட்ரி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின்(ஐ.ஓ.சி.)தலைவராக 12ஆண்டுகள் பணியாற்றிய ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் பாச்விலகியதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் நீச்சல் வீராங்கனையான (ஜிம் பாப்வே)கிறிஸ்டி கவன்ட்ரி அதிகவாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில், சர்வதேச விளையாட்டு அமைப்பில் இந்த அரியணையில் அமரும் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டவர் என்ற பெருமையை 41 வயதான கவன்ட்ரி பெற்றார்.

ஐ.ஓ.சி. அமைப்பு உருவாக்கப்பட்ட தினமான(ஜூன்.23), சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கவுன்ட்ரி முறைப்படி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடந்த விழாவில் கோல்டன் சாவியை முன்னாள் தலைவர் தாமஸ் பாச்அவரிடம் வழங்கினார். ஐ.ஓ.சி. சிறந்தவரின் கைக்கு சென்று இருப்பதாகவும்,அவர் நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் செயல்படுவார் என்றும் தாமஸ் பாச் கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News