விளையாட்டு போட்டிகள் 24th JUNE
தேசிய ஜூனியர் தடகளம்
தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) தொடரின் 23வது சீசன், உ.பி., யின் பிரக்யாராஜில் நேற்று நடந்த ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் தமிழக வீரர் யுவராஜ், 13.69 வினாடி நேரத்தில் வந்து தங்கம் கைப்பற்றினார். இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2021ல் தேஜாஸ் ஷிர்சே (13.74) சாதித்து இருந்தார்.
போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் கவின் ராஜா (5.11) தங்கம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் கிளாடிசியா ஷினே (14.44) வெள்ளி கைப்பற்றினார்.
ஆண்களுக்கான தாண்டுதலில் நீளம் தமிழக வீரர் ஜித்தின், 7.83 மீ., துாரம் தாண்டி, வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் தேஷிகா (54.99 வினாடி) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தேசிய மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டி
தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பில் முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 8-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. தமிழக அணி தரப்பில் முத்துசெல்வன் 4 கோலும், கேப்டன் ஆடம் சின்கிளைர், சுதர்சன், ரமேஷ், வினோத்குமார் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு கால்இறுதியில் ஒடிசா அணி 6-2 என்ற கோல் ஆந்திராவை தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தது.
பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தியது. பஞ்சாப் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை தோற்கடித்து, லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் கர்நாடகா, இமாசலபிரதேசம். கேரளா,மராட்டியமும், 'பி' பிரிவில் பஞ்சாப், ஒடிசா, அரியானா, தமிழ்நாடும் முறையே முதல் 4 இடங்களுடன் கால்இறுதிக்குள் நுழைந்தன.
இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டங்களில் மராட்டியம்-கர்நாடகம் (காலை 10 மணி), அரியானா-சண்டிகார் (பகல் 12 மணி) அணிகள் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் நடக்கும் கால்இறுதி ஆட்டங்களில் கர்நாடகா-தமிழ்நாடு (காலை 6 மணி), ஒடிசா -கேரளா (காலை 8 மணி), இமாசல பிரதேசம்-அரியானா (பிற்பகல் 2 மணி), பஞ்சாப்- மராட்டியம் (மாலை 4 மணி) அணிகள் சந்திக்கின்றன.
கால்பந்து
ஆஸ்திரேலியாவில்பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின்21வது சீசன்,2026, மார்ச்1,26(12 அணிகள்) நடக்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சீனா,2,3வது இடம் பிடித்த தென் கொரியா, ஜப்பான், தொடரை ஆஸ்திரேலியா நடத்தும்4 அணிகள் நேரடியாக பங்கேற்க உள்ளன.
மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடக்கின்றது. 34 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரி விலும் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
இந்திய அணிB பிரிவில் மங்கோலியா, தாய்லாந்து, ஈராக், திமோர்,லெஸ்தே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று முதல் போட்டியில் இந்திய அணி, மங்கோலியாவை சந்தித்து ,இந்திய அணி 13-0 என வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்தொடர் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப் பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து விட்ட முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி கிராண்ட் சோழாசை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்த திருச்சி அணியின் கேப்டன் சுரேஷ் குமார் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப் பர் கில்லீஸ் அணி 5 விக் கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது .20 ஓவர்களில் திருச்சி அணி 6 விக்கெட்டுக்கு 174 ரன்னில் அடங்கியது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply