27 TH JUNE விளையாட்டு போட்டிகள்
ஸ்குவாஷ்
ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் நடந்த ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் அபேசிங், வேலவன் செந்தில்குமார் ஜோடிஇரண்டாவது முறையாக தங்கம் வென்றது.
பெண்கள் இரட்டையரில் இத்தொடரின் 'நம்பர்-2' ஜோடி, இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங்ஜோடி, 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற மலேசியாவின் அய்னா அமனி,இ ஜின்இங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 8-11 என கோட்டை விட்ட இந்திய ஜோடி, அடுத்த இருசெட்டுகளை 11-9, 11-10 என போராடி,முடிவில் இந்திய ஜோடி 2-1 என வென்று, தங்கம் கைப்பற்றியது.
கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் 'நம்பர்-1' இந்தியாவின் அபே சிங், அனாஹத் சிங் ஜோடி,'நம்பர்-2'ஆக உள்ள மலேசியாவின் அர்னால்டு, சண்டாரை ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 2-0 என (11-9, 11-7) வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது.
ஆசிய அல்லது உலகஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடரில், மூன்று பிரிவிலும் தங்கம் கைப்பற்றிய முதல் அணி என இந்தியா புதிய வரலாறு படைத்தது
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி
டி.என்.பி.எல்., லீக் நெல்லையில் நேற்று நடந்த போட்டியில் நெல்லை, 'நடப்பு சாம்பியன்' திண்டுக்கல் அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நெல்லை அணி20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்எடுத்தது. திண்டுக்கல் அணி 18.4 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 180 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஹாக்கி
சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் இந்தியா மாஸ்டர்ஸ் ஹாக்கி தொடரின் முதல் பதிப்பு நடக்கிறது.
முதல் அரையிறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி, சண்டிகர் அணியை 3,0 என்ற கோல் கணக்கில், வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா அணி,4,1 என்ற கோல் கணக்கில், ஒடிசா அணியை வீழ்த்தியது.
நேற்று நடந்த பெண்களுக்கான முதல் அரையிறுதியில், தமிழக அணி1,4 எனஒடிசாவிடம் வீழ்ந்தது. இரண்டாவது அரையிறுதியில் ஹரியானா 3-0 என பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
இன்று மதியம் 2:00 மணிக்கு( பெண்கள்), மாலை 4:00 மணிக்கு(ஆண்கள்) இறுதிப் போட்டிகள் நடக்க உள்ளன.
மல்யுத்தம்
17 வயதுக்குட்பட்ட நட்சத்திரங்களுக்கான ஆசியமல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் வியட்நாமில்பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டிகள் நடந்தன.
43 கிலோபிரிவு பைனலில் இந்தியாவின் ரச்சனா,9,0 என ஜப்பானின் மிராஹிகாசியை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார். 46 கிலோபைனலில் இந்தியாவின் ருடுஜா,10,0 எனஉஸ்பெகிஸ்தானின் மஷ் ஹுராவை வீழ்த்தினார். 57கிலோ பைனலில் கஜகஸ்தானின் உஸ்மனோவாவை நாக் அவுட்' செய்து, இந்தியாவின் மோனி, தங்கம் கைப்பற்றினார்.
மற்றொரு பைனலில்(65 கிலோ) இந்தியாவின் அஷ்வினி,2,0 என சீனாவின் இகிங் ஜியாவைவென்றார்.. 69கிலோ பைனலில் இந்தியாவின் மணிஷா, 8-0 என சீனாவின் ஜியாகி ஜுவை வென்றார்..
தவிர, சேஷ்தா (40), டினா புனியா (61), காஜல் (73) வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். அஞ்சலி (49), சாரிகா (53), வெண் கலம் வென்றனர். இந்தியா 5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கம் வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் ஆனது.
ஸ்னுாக்கர்
இலங்கையில் நடந்த ஆசிய '6-ரெட்' சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவின் பராஸ் குப்தா 2-6 என மலேசியாவின் தோர் சுவான் லியோங்கிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
0
Leave a Reply