25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் மெஸ்ஸி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் மெஸ்ஸி.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவருமான லயோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2005-ல் அர்ஜென்டினா அணியில் அறிமுகமான மெஸ்ஸி, 2006 உலகக் கோப்பை தொடரில் செர்பியா மற்றும் மான்டேநெக்ரோ அணிக்கு எதிரான போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார். இதையடுத்து 2010, 2014, 2018 மற்றும் 2022 உலகக் கோப்பை தொடர்களிலும் அவர் பங்கேற்றார்.

2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 1978, 1986-க்கு பிறகு அர்ஜென்டினா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியில் மெஸ்ஸியின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

தனது ஓய்வு குறித்து மெஸ்ஸி கூறுகையில், “உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு குறித்து தீவிரமாக யோசித்தேன். தற்போது அர்ஜென்டினா அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இது மிகவும் வேதனையான முடிவு. ஆனால் ஓய்வுக்கான நேரம் வந்துவிட்டதை புரிந்து கொண்டேன்” என்றார்.

மேலும், “கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் வழங்கிய அன்பிற்கு நன்றி. மைதானத்தில் இருந்தபோது உங்கள் குரலைக் கேட்கும் வாய்ப்பு இனி கிடைக்காது. இனிமேல், உங்களில் ஒருவராக இருந்து அர்ஜென்டினா அணிக்கு ஆதரவு அளிப்பேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News