சர்வதேச , பாரா தடகள கிரான்ட்ப்ரீ தொடர் டில்லியில் இன்று துவக்கம்
, பாரா தடகள கிரான்ட்ப்ரீ தொடர், டில்லி நேரு விளையாட்டு அரங்கில், இந்தியாவில் முதல் முறையாக இன்று துவங்குகிறது. மூன்று நாள் நடக்கும் தொடரில், பாரா வீல் சேர் ரேசிங், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்க உள்ளன. 18 நாடுகளைச் சேர்ந்த 283 பாரா வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்னர். இந்தியா சார்பில் 167 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகம் சார்பில் ரமேஷ், கீர்த்திகா உட்பட 12 பேர் கலந்து கொள் கின்றனர். இவர்களுக்கு தலா 65,000 ரூபாய் வீதம், 10.40 லட்சம் ரூபாய் நிதி தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவி வழங்கி உள்ளது.
0
Leave a Reply