தேசிய யூத் தடகளம் சாம்பியன்ஷிப் 20வதுசீசன் நிவேத் 'தங்கம்' கைப்பற்றினார்.
பீஹாரின் பாட்னாவில் தேசிய யூத் தடகளசாம்பியன்ஷிப் 20வதுசீசன், நடக்கிறது.இரண்டாவதுநாளானநேற்று, ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டம் நடந்தது. தமிழகத்தின் நிவேத், 14.35 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
ஜார்கண்ட்டின் சாஜித் (14.421), கேரளாவின் பஜலுல் ஹக் (14.429) வெள்ளி, வெண்கலம் வென்றனர். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் எட்வினா (55.86 வினாடி) தங்கம் கைப்பற்றினார்.
0
Leave a Reply