சாம்பியன்ஸ் டிராபி பைனல் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி பைனல் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிக்கு கொண்டு சென்ற வீரர்கள்
துபாயில் சாம்பியன்ஸ் டிராபி பைனல் நடந்தது. இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. ரோகித் சர்மா 37, ஒருநாள் அரங்கில் இருந்தும் விடை பெறுவார் என எதிர் பார்க்கப்பட்டது.ரோகித் கூறுகையில்," எதிர்கால திட்டம் எதுவும் இல்லை. ஒருநாள் போட்டியில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை. வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். வரும் உலக கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து இப்போதைக்கு எதுவும் தெரிவிக்க முடியாது," என்றார்.
கோலி கூறுகையில்,. இத்தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அடைந்த ஏமாற்றத்துக்குப் பின், தற்போது பெரிய தொடரில் சாதித்துள்ளோம்,'' என்றார்.
நான்காவது இடத்தில் களமிரங்கிய ஸ்ரேயாஸ் இத்தொடரில் அதிக ரன் (243) எடுத்த இந்திய வீரரானார். கேப்டன் ரோகித் கூறுகை யில், "போட்டியின் 'மிடில்' சூழலில், சிறப்பாக செயல்பட்டார் ஸ்ரேயாஸ். சக வீரர்களுடன் இணைந்து 'பார்ட்னர்ஷிப்' அமைத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்று 'சைலண்ட் ஹீரோ' ஸ்ரேயாஸ்," என்றார்.
ஐ.சி.சி.,அரங்கில் இரண்டு அல்லது அதற்கு மேல்கோப்பை வென்ற 2வது இந்திய கேப்டன் ஆனார் ரோகித். இவரது தலைமையிலான இந்திய அணி, 'டி-20' உலக கோப்பை (2024), சாம்பியன்ஸ், டிராபி (2025) வென்றது. தோனி வழி நடத்திய இந்திய அணி 2007ல் 14-20 உலக கோப்பை, 2011 உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என 3 முறை சாம்பியன் ஆனது
கடந்த 2024ல் 'டி - 20' உலக கோப்பை வென்ற போது, இந்திய வீரர்கள் மும்பை விமான நிலையத்தில் இருந்து, பிரபோர்ன் மைதானம் வரை திறந்தவெளி பஸ்சில் வெற்றி ஊர்வலம் சென்றனர். இம்முறை பிரபோர்ன் மைதானத்தில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தவிர மார்ச் 22ல் ஐ.பி.எல்., தொடர் துவங்க உள்ளது. இதனால் துபாயில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனித்தனியாக தாயகம் திரும்புகின்றனர். வெற்றி பவனி இருக்காது எனத் தெரிகிறது.
பாகிஸ்தான், துபாயில், சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடந்தது. இதில் சிறப் பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து, 12 பேர் கொண்ட அணியை ஐ.சி.சி., வெளியிட்டது. இந்த அணியில் இந்தியா சார்பில் அதிக பட்சமாக 6 பேர் இடம் பெற்றனர். கோலி, ஸ்ரேயாஸ், ராகுல், ஷமி, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் தேர் வாகினர். விக்கெட் கீப்பருக்கான இடத்தை ராகுல் பிடித்தார். பைனலில், ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடம்கிடைக்கவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை வெல்ல கைகொடுத்த 9 டிராபி விக்கெட் சாய்த்த வருண் சக்ரவர்த்தி.
0
Leave a Reply