25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Jan 23, 2026

செர்பியாவின் ஜோகோ விச், இத்தாலியின் சின்னர், போலந்தின் ஸ்வி யாடெக் உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில்,. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் பிரான்செஸ்கோ மேஸ்ட்ரெல்லி மோதினர். ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

Jan 23, 2026

நேற்று டபிள்யு. பி. எல்., தொடரில் குஜராத் அணி,உ.பி., அணியை 45 ரன்னில் வீழ்த்தி மூன்றாவது வெற்றி பெற்றது .

நேற்று நடந்த பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு. பி.எல்.,) தொடருக்கான லீக் போட்டியில்  குஜராத்தின் வதோதராவில் குஜராத், உ.பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற உ.பி., அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. உ.பி., அணி 17.3 ஓவரில் 108 ரன்,குஜராத் அணி 20 ஓவரில் 153/8 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Jan 23, 2026

இந்தியாவின் சிந்து இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதிக்கு முன்னேறி, பாட்மின்டன் சர்வதேச ஒற்றையர் பிரிவில் 500வது வெற்றியை பதிவு செய்தார்.

'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் இந்தோனேஷியாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் மோதினர்.சிந்து 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இது, பாட்மின்டன் சர்வதேச ஒற்றையர் பிரிவில் சிந்து பெற்ற 500வது வெற்றி.இதுவரை 732 போட்டியில், 500 வெற்றி, 232 தோல்வியை பெற்றுள்ளார். 6வது சர்வதேச நட்சத்திரமான முதல் இந்தியர் ஆனார். 

Jan 23, 2026

டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரி குகேஷ் வெற்றி பெற்றார்.

டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 88வது சீசன்நெதர்லாந்தில்,  நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர். 'நடப்பு உலக சாம்பியன்' 'குகேஷ், செக்குடியரசின் தாய் டாய் வான் நுயென் ஐந்தாவதுசுற்றில் மோதி,51வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார்.  3 புள்ளிகளுடன் 4 வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். 

Jan 22, 2026

டபிள்யு. டி.டி., கன்டென்டர் டேபிள்டென்னிஸ்  இந்தியாவின் மணிகா பத்ரா, மனுஷ் ஷா வெற்றி.

ஓமனில், டபிள்யு. டி.டி., கன்டென்டர் டேபிள்டென்னிஸ் தொடர் ஓமனில்,பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, ரஷ்யாவின் மரியா பான்பிலோவா மோதினர். இதில் மணிகா 3–2 (9–11, 11-8, 11-7, 8-11, 12-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் மனுஷ் ஷா, சீன தைபேயின் குவான்-ஹாங் குவோ  ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதினர். இதில் மனுஷ் ஷா 3-0 (11-6, 11-5, 11-5) என வெற்றி பெற்றார். இந்தியாவின் ஸ்வஸ்திகா கோஷ், தனிஷா ஜோடி 3-1 (7-11, 11-6, 11-4, 11-9) என ஸ்லோவாகியாவின் டாட்டியானா, பிரிட்டனின் டின்-டின் ஹோ ஜோடியை பெண்கள் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில்  வென்றனர்.

Jan 22, 2026

யூத் டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடரில், இந்தியாவின் திவ்யான்ஷி இரண்டாவது இடம் பிடித்தார்.

யூத் டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர்கத்தார் தலைநகர் தோஹாவில் ,17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, தென் கொரியாவின் உஇங் ஸ்யுவானை எதிர்கொண்டு முதல் செட்டை திவ் யான்ஷி 11-6 என கைப் பற்றினார். அடுத்த இரு செட்டை 5-11, 4-11 என இழந்தார்.4வது செட்டை 11-4 என வென்று பதிலடி தந்தார். வெற்றியாளரை  முடிவு செய்யும் 5வது, கடைசி செட்டில் திவ்யான்ஷி, 5-11 என நழுவவிட்டார். முடிவில் திவ்யான்ஷி 2-3 என்ற செட் கணக்கில் தோல்வி யடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார். இந்தியா வின் ஆதித்யா, அன்கோ லிகா ஜோடி, 15 வயதுக்கு உட்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ,ஸ்பெயினின் அலெக்சாண்டர், ஆஸ்திரி யாவின் சோபியா ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய 4 3-0 (11-4, 11-9, 11-7) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. 

Jan 22, 2026

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில், பெண்கள்ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் ஜுவோஜுவான் பாய் மோதி,சபலென்கா 6-3, 6-1என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். செர்பியாவின் டேனி லோவிச்சை ,அமெரிக்காவின் கோகோ காப்  மற்றொரு போட்டியில் 6-2, 6-2 என, வென்றார்.ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனியின் யானிக் ஹான்ப்மேன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் மோதி, அல்கா ரஸ் 7-6, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ்  டி மினார் 6-7, 6-2, 6-2, 6-1 என செர்பியாவின் ஹமத் மெட்ஜெடோ விச்சை  மற்றொரு போட்டியில் வென்றார். பிரான் சின் அலெக்சாண்டர் முல்லரை ,ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 4-6, 6-3, 6-4 என, தோற்கடிததார். 

Jan 22, 2026

முதல் 'டி-20' கிரிக்கெட் போட்டி இந்திய அணி முன்னிலை.

முதல் 'டி-20' கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 48 ரன் வித்தியாசத்தில், நியூசிலாந்தை வென்றது. பேட்டிங்கில் அபிஷேக் சர்மா 35 பந்தில் 84 ரன் விளாசினார்.5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி பங்கேற்றது. நேற்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் முதல் போட்டியில், 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர், பீல்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 190/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.இந்திய அணி 20 ஓவரில்  238/7 ரன் குவித்து, இந்திய அணி 1-0 என தொடரில்  முன்னிலை  பெற்றது. 

Jan 22, 2026

சிந்து, லக்சயா சென்  இந்தோனேஷிய பாட்மின்டனில் வெற்றி.

 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் இந்தோனேஷியாவில்,  பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின்மனாமி சுய்சூ மோதினர். சிந்து 22-20, 21–18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 21-16, 21-17 என சீனதை பேயின் பாய் யு போவை தோற்கடித்தார் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப் பானின் கோகிவடானபே ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதி, ஸ்ரீகாந்த் 21-15, 21-23, 24-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். றொரு  இந்தியாவின் லக்சயா சென் 21-13, 16-21, 21-14 என  சீனதைபேயின் வாங் டிசூ வெய்யை மற்றொரு போட்டியில் வென்றார்.

Jan 21, 2026

5 போட்டிகள் கொண்ட 'டி-20 CRIKET' இன்று இரவு 7 மணிக்கு நாக்பூரில் நடை பெற உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்முடிந்த கையுடன், 'டி-20' இன்று ஆரம்பமாகிறது. இம்முறை சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்மோதுகின்றன.  முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நாக்பூரில் நடைபெற உள்ளது.

1 2 ... 47 48 49 50 51 52 53 ... 158 159

AD's



More News