100 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் சாதனை.
100 மீ., 'பிரீஸ்டைல்' ஆண்கள் நீச்சல் போட்டி பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் பங்கேற்றார். 'ஹீட்-6ல்' களமிறங்கிய இவர், 49.46 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். ஸ்ரீஹரி நடராஜ், அரையிறுதிக்குள் நுழைந்தார். இவர், 100 மீ. 'பிரீஸ் ஸ்டைல்' பிரிவில் பந்தயதுாரத்தை அதிவேகமாக கடந்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். 10வது இடம் பிடித்த ஸ்ரீஹரி நடராஜ் (25.59 வினாடி), ஆண்களுக்கான 50 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவு தகுதிச்சுற்றில் அரையிறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply