25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Jan 19, 2026

கிரிக்கெட்  ஒருநாள் தொடரை  இந்திய மண்ணில் முதல் முறையாக வென்ற நியூசிலாந்து அணி.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா வந்த நியூசிலாந்து அணி பங்கேற்று,. முதல் இரு போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி நேற்று இந்துாரின் (ம.பி.,) ஹோல்கர் கிரிக்கெட்மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் வாய்ப்பு பெற்றார்.நியூசிலாந்து அணி 50 ஓவரில் 337/8 ரன் குவித்தது,  இந்திய அணி 46 ஓவரில் 296 ரன்னுக்கு அவுட்டாகி தோல்வி அடைந்தது. தொடரை 2-1 என  வென்று, நியூசிலாந்து அணிகோப்பை கைப்பற்றியது.

Jan 19, 2026

தென் கொரிய வீராங்கனை ஆன் சே யங்,இந்திய ஓபன் பாட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்றார்.

 டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில்  இந்திய ஓபன் சர்வதேச பேட் மிண்டன் போட்டியில்,நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சீன தைபே வீரர் லின் சுன்யி 21-10, 21-18 என்ற நேர் செட் டில் ஜோனதன் கிறிஸ்டியை (இந்தோனேசியா) வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 'நம்பர் ஒன்' வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தென்கொரியாவின் அன்சே யங் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 21-13, 21-11 என்ற நேர் செட்டில் 43 நிமிடங்களில் சீனாவின் வாங்ஷியியை தோற்கடித்து மீண்டும் பட்டத்தை கைப்பற்றினார். கோப்பையை வென்ற இவருக்கும் தலா ரூ.60 லட்சம் பரிசுத் தொகையாக வழங் கப்பட்டது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டியில் இந்தியர்கள் யாரும் கால் இறுதியை தாண்டவில்லை..

Jan 19, 2026

பெலாரசின் சபலென்கா, பிரிட்டனின் ரடுகானு, ஸ்பெயினின் அல்காரஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்மெல்போர்னில்,  பெண்கள் ஒற் றையர் பிரிவு முதல் சுற்றில், பெலாரசின் அரினா சபலென்கா, பிரான்சின் டியான்ட்சோவா மோதினர். உலகின் 'நம்பர்-1' சபலென்கா 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.பிரிட்டனின் எம்மா ரடுகானு 6-4, 6-1 என தாய் லாந்தின் மனஞ்சயா சவாங்காயேவை மற்றொரு முதல் சுற்றில்வெற்றி பெற்றார். உக்ரைனின் எலினா ஸ்வி டோலினா 6-4, 6-1 என ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவை தோற்கடித்தார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன்ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதினர். இதில் அல்காரஸ்  6-3, 7-6, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார். 

Jan 17, 2026

ஒருநாள் தொடரில் ஆண்கள் கிரிக்கெட்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க  இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைய, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 'பைனல்' போன்ற மூன்றாவது போட்டி நாளை (ஜன.18) இந்தாரின் (ம.பி.,) ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய பவுலிங் கூட்டணியில்மாற்றம் செய்யப்படலாம் வெற்றி பெற்ற அணி கோப்பை கைப்பற்றலாம்.

Jan 17, 2026

பெங்களூர் அணி பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி. 

 பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் ('14-20') தொடருக்கான லீக் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று ,குஜராத், பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது..பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. குஜராத் அணி 18.5 கஓவரில், 150 ரன் எடுத்து தோல்வியடைந்தது. 

Jan 17, 2026

இந்தியாவின் ஆர்யன்  வர்ஷ்னே 92வது கிராண்ட் மாஸ்டர் ஆனார் .

சர்வதேசசெஸ்தொடர் ஆர்மேனியாவில் ,இந்தியாசார்பில்சர்வதேசமாஸ்டர்அந்தஸ்து பெற்றஆர்யன்வர்ஷ்னே 21 வயது, உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். ஆர்யன் , ஆர்மேனியானின் டைக்ரானை மோதிய 8வது சுற்று 'டிரா' ஆனது. இதையடுத்து, 8 சுற்றில் 6.5 புள்ளி பெற்ற ஆர்யன், கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான,  மூன்றாவது அந்தஸ்தை எட்டினார். பரிமார்ஜன் நேகி, அபிஜீத் குப்தா, ஸ்ரீராம் ஜா, வைபவ் சூரி, சஹாஜ் குரோவர், ஆர்யன் சோப்ரா, பிரிது குப்தாவை தொடர்ந்து டில்லியின் 8வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் ஆர்யன் வர்ஷ்னே.கடந்த 2024ல் முதலில் சர்வ தேச மாஸ்டர் ஆனார். அடுத்து கிரீஸ், வங்கதேச தொடரில் டில்லியை சேர்ந்த ஆர்யன், இரண்டாவுது அந்தஸ்தை எட்டினார். ஆர்மேனிய தொடரில் சிறப்பாக செயல்பட்ட, இந்தியாவின் ஆர்யன்  வர்ஷ்னே 92வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்..

Jan 17, 2026

வங்கதேசம் செல்லும் ஐ.சி.சி., குழு உலக கோப்பை பிரச்னைக்கு தீர்வு காண...

 இந்தியாவுக்கு எதிரான மனநிலை வங்கதேசத்தில் நிலவுவதால், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப் பட்டார்.இதற்கு பதிலடியாக 'டி-20' உலக கோப்பை தொடரில் (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க, இந்தியா வர முடியாது கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) வங்கதேசம் மறுத்து,போட்டிகளை இலங்கைக்கு வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் மாற்ற (ஐ.சி.சி.,) வேண்டுகோள் விடுத்துள்ளது. பி.சி. பி., முடிவை, வங்கதேச வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் மிதுனுக்கு, முகமது கொலை மிரட்டல்கள் வருகின்றன. இவர், கூறுகையில், "உலக கோப்பை தொடர் என்பதால், வங்கதேச வீரர்கள் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். வீரர்கள் நலனுக்கு ஏற்ப, பி.சி.பி., முடிவெடுக்கும் என நம்புகிறேன்.  கிரிக்கெட், வீரர்கள் நலனுக்காக மட்டுமே பேசினேன்," தேசத்திற்கு எதிராக எதுவும் பேசவில்லை.," என்றார் .

Jan 17, 2026

சங்கிலி குண்டு எறிதலில் தன்யா  சவுத்ரி அனைத்து இந்திய பல்கலை, விளையாட்டுக்கான தங்கம் வென்றார்.

அனைத்து இந்திய பல்கலை, 85வது விளையாட்டு சீசன் மங்களூருவில்,  பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல் பைனலில், சண்டிகர் பல்கலையின் சர்வதேச வீராங்கனை தன்யா சவுத்ரி 22, அதி கபட்சமாக 65.60 மீ., எறிந்து தங்கம் வென்றார். இது, 2017ல் தேசிய சாதனை படைத்த சரிதா சிங் (65.25 மீ.,) எறிந்த துாரத்தை விட 35 செ.மீ., அதிகம். ஆனால் அனைத்து இந்திய பல்கலை., விளையாட்டு, சர்வதேச தடகள கூட்டமைப்பின் அங்கீகாரம் இல்லாததால் தேசிய சாதனையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. தன்யா, தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார்.  கடந்த ஆண்டு நடந்த 'கேலோ இந்தியா' பல்கலை, விளையாட்டில் ஆசிய விளையாட்டில்' (2023, 60.50 மீ,  7 வது இடம்) பங்கேற்ற தன்யா, தங்கம் வென்றிருந்தார்.இப்போட்டியில் வெள்ளி, வெண்கலத்தை முறையே நந்தினி (61.84 5. மீ,),  கிரிமா (56.46 .மீ,) கைப்பற்றினர். 

Jan 17, 2026

பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த பாலமேடு ஜல்லிக்கட்டு.

பாலமேட்டில் கிராமப் பொது மகாலிங்க சுவாமிகள் மடத்துக் கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார். மலைக்க வைக்கும் திமில்களை சிலுப்பிக்கொண்டு, மிரட்சி பார்வையில் முரட்டுக் கொம்புகளுடன் 'தொட்டுப்பார்' என சீறிப் பாய்ந்த காளைகளும், விடலைக் கரங்களுடன் தாவிப் பாய்ந்து வந்து பார்' என அடக்கிய வீரர்களும் களம்கண்ட மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு, பார்வையாளர் களை பரவசமாக்கியது.முதலாவதாக ஏழு 'மரியாதை காளைகள்' அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை வீரர்கள் பிடிக்கவில்லை. அந்த மாடுகளுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. முதல் சுற்று  காலை மணிக்கு 9:35 துவங்கியது. 50 வீரர்கள் மஞ்சள் கலர் சீருடை அணிந்து களம் இறங்கினர்.வாடிவாசலில் இருந்து துள்ளிக் குதித்து வெளியேறிய காளைகளை வீரர்கள் சுற்றி வளைத்து அடக்க முயற்சித்தனர். வலுவான திமில் கொண்ட காளைகள் வீரர்களை  முட்டி பந்தாடியதும், தீரம் கொண்ட வீரர்கள் விடாப் பிடியாக, காளைகளை அடக்கி வெற்றி பெற்றதும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 

Jan 14, 2026

ஓபன் 'சூப்பர் 750' பாட் மின்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்றார்.

டில்லியில், நேற்று துவங்கியஓபன் 'சூப்பர் 750' பாட் மின்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் லக்சயா சென், ஆயுஷ்ஷெட்டி மோதினர். லக்சயா முதல் செட்டில் 21-12 என, அடுத்த செட்டை 21-15 என வென்றார். 36 போட்டியின் முடிவில் லக்சயா சென்,21-13, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி, பெண்கள்இரட்டையர் முதல் சுற்றில் ,தாய்லாந்தின் ஆர்னிச்சா, சுகிட்டா ஜோடியை சந்தித்தது. இந்திய ஜோடி முதல் செட்டில் 21-15 என ,இரண்டாவது 21-11 செட்டை என வென்றது. இந்திய ஜோடி போட்டியின் முடிவில் 21-15, 21-11 என்ற கணக்கில் வென்றது. இந்தியாவின் ஹரிஹரன் (தமிழகம்)அர்ஜுன் ஜோடி, ஆண்கள் இரட்டை யர் முதல் சுற்றில், 21-15, 21-18 என மலேசியாவின் ஈவ் சின் ஆங், இ தியோ ஏ ஜோடியை வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. 

1 2 ... 49 50 51 52 53 54 55 ... 158 159

AD's



More News