ஆசிய ஜூனியர் பாட்மின்டன் (கலப்பு அணி) இந்தோனேஷியாவில், சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. அணிகளுக்கு இடையிலான லீக் சுற்றில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, கலப்பு இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் விஷ்ணு கேதர், ரெஷிகா ஜோடி 11-5 என இலங்கையின் கெனத், இசுரி ஜோடியை வீழ்த்தியது. பெண்கள் இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் காயத்ரி, மான்சாரவாத் ஜோடி 11-9 என இலங்கையின் இசுரி, சிதுமி டி சில்வா ஜோடியை வென்றது. இந்தியாவின் தன்வி சர்மா 11-7 என பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் இலங்கையின் சிதுலி ரணசிங்கேவை வென்றார். இந்தியாவின் பிரனவ் ராம் 11-7 என ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ,இலங்கையின் திடாசாவை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் ராஜுலு ராமு 11-9 என இலங்கையின் ரணித்மா லியனகேவை வென்றார்.இந்திய அணி 110-69 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி, தனது 2வது போட்டியில் இன்று ஐக்கிய அரபு எமிரேட்சை (யு.ஏ.இ.,) சந்திக்கிறது.
பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் ,46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற் கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம் பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையி லான இத்தொடரின் நான்காவது சுற்று நடந்தது. இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் பங்கேற்றனர். 19 வயது திவ்யா, உலகின் 'நம்பர்-2' வீராங்கனை, சீனாவின் ஜூ ஜினரை சந்தித்தார். முதல் இரு சுற்று முடிவில் 1.0-1.0 என சமன் ஆனது. நேற்று 'டை பிரேக்கர்' நடந்தது.இதன் முதல் போட்டியில் வென்ற திவ்யா, அடுத்த போட்டியை 'டிரா' செய்தார். முடி வில் திவ்யா 2.5-1.5 என வெற்றி பெற்று, காலிறு திக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஹம்பி, சுவிட்சர்லாந்தின், அலெக்சாண்ட்ரா மோதினர். இதில் ஹம்பி 2.5-1.5 என வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் வைஷாலி, கஜகஸ்தானின் கமலிடெனோவாவை 4.5-3.5 என வெற்றி பெற்றார். இந்தியாவின் ஹரிகா, உக்ரைனின் கேத்தரினாவை போட்டி முடிவில், ஹரிகா 3.5-2.5 என வென்றார்.
5 தொடர்களாக பிரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் டூர், நான் காவது தொடர், அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடக்கிறது. நார்வேயின் கார்ல்சன்,இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் உட்பட 16 பேர், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடந்தன.'பிரீஸ் டைல்' செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என பெருமை பெற்றார் அர்ஜுன்.மற்றொரு காலிறுதியில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோவை எதிர்கொண்டார். சுமார் 11 மணி நேரம் நடந்த போட்டியில் முடிவில் பிரக்ஞானந்தா 3.0-4.0 என வீழ்ந்தார்.
32 வது உலக பல்கலை., விளையாட்டு ஜெர்மனியில் 114 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்தியாவின் 90 பல் கலை.,யில் இருந்து 300க்கும் மேற்பட் டோர் பங்கேற்றுள்ளனர். நீச்சலில் ஆண்களுக்கான 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் அரையிறுதி நடந்தது. இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் ,ஆண்கள் 200 மீ., பிரீஸ்டைல் போட் டியில் 5வது தகுதிச்சுற்றில் ஒரு நிமிடம், 48.22 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறினார். இது புதிய தேசிய சாதனை (இதற்கு முன் 1:48.66 வினாடி) ஆனது. 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் ,ரோகித் பெவடிக்சன் (தமிழகம்) இதன் தகுதிச்சுற்றில் 24.00 வினாடியில் வந்து, தேசிய சாதனை படைத்து களமிறங்கினார். இம்முறை 23.96 வினாடி நேரத்தில் வந்து 6வது இடம் பெற்று, பைனல் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் 24.00 வினாடிக்கும் குறைவான நேரத்தில் கடந்த முதல் இந்தியர் என, தேசிய சாதனை படைத்தார். இந்திய அணி ஆண்கள் டேபிள் டென்னிஸ் குரூப்-3ல் இடம் பெற்ற, கோலம்பியாவுக்கு எதிரான போட்டியில், இந்தியாவின் ஹர்குன்வர், தேவர்ஷ், அயாஸ் முராத் வெற்றி பெற்றனர். இந்தியா 3-2 என வென்று, 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது. இந்திய பெண்கள் அணி 3-1 என நெதர்லாந்தை வீழ்த்தி, 'ரவுண்டு-16' சுற்றுக்குள் நுழைந்தது.பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் டென்னிசில் இந்தியாவின் வைஷ்ணவி, 6-1, 6-0 என நெதர்லாந்தின் மரியா ஜெனியாவை வென்றார். இந்தியாவின் அஞ்சலி ரதி, 6-0, 6-0 என உகாண்டாவின் கிறிஸ்டியாவை சாய்த்தார். ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் கபிர், மான் ஜோடி 6-1, 6-1 என தாய்லாந்தின் மஜோலி, சுபாவத் ஜோடியை வென்றது.
இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து சென்று மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய ,முதல் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. இங்கிலாந்து அணி, 50 ஓவரில் 258/6 ரன் எடுத்தது. இந்திய அணி, 48.2 ஓவரில் 262/6 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.
ஜெர்மனியில் 32வது உலக பல்கலை., விளையாட்டில் 114 நாடுகள் பங்கேற்று,. 18 விளையாட்டில் 234 பிரிவுகளில் போட்டி நடக்கின்றன. இந்தியாவின் 90 பல்கலையில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். நீச்சலில் ஆண்களுக்கான 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் போட்டியில் இந்தியா சார்பில் ஹர்ஷ் சரோஹா, ரோகித் பெனடிக்சன் (தமிழகம்), பங்கேற்றார். சமீபத்தில் புவனேஸ்வரில், நடந்த தேசிய நீச்சல் சாம்பியன் ஷிப்பில் 100 மீ., தங்கம் வென்ற ரோகித், 6வது தகுதிச்சுற்றில் களமிறங்கி,24.00 வினாடியில் வந்து, ரோகித் முதலிடம் பிடித்து, புதிய தேசிய சாதனை ஆனது. ஒட்டு மொத்தமாக ரோகித், 12வது இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.' மற்றொரு வீரர் ஹர்ஷ், 25.41 வினாடியில் வந்து, 4வது தகுதிச்சுற்றில், 4வது இடம் பெற்றார். ஒட்டு மொத்தமாக் 52வது இடம் பெற்று, அரையிறுதி வாய்ப்பை இழந்தார். 400 மீ., பிரீஸ்டைல் போட்டியில் இந்தி யாவின் அனீஷ் (22 வது இடம்), ஷிவாங்க் (29) தோற்றார். .
5 தொடர்களாக பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் டூர், நடத்தப்படுகிறது. இதன் நான்காவது தொடர், அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடக்கிறது. நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் உட்பட 16 பேர், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ,போட்டி லீக் முறையில் நடந்தன.ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-4' வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறலாம், 'ஒயிட்' பிரிவில் இடம் பெற்ற பிரக்ஞானந்தா, முதல் 3 போட்டியில் 2 வெற்றி, ஒரு டிரா செய்தார். 4வது போட்டியில் இந்தியாவின் 'நம்பர்-1' வீரர், பிரக்ஞானந்தா, 'பிரீஸ் டைல்' போட்டியில் சிறப்பாக செயல்படும், உலகின் 'நம்பர்-1', கார்ல்சனை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் கலமிறங்கிய பிரக்ஞானந்தா, 39 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.7 சுற்றில் பிரக்ஞானந்தா (3 வெற்றி, 3 'டிரா', 1 தோல்வி ) 4.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆசியாவின் பழமை வாய்ந்த, இந்தியாவின் பாரம்பரிய கால்பந்து தொடர் துாரந்த் கோப்பை. 134வது சீசன் ஜூலை 23 - ஆகஸ்ட் 23ல் நடக்க உள்ளது.இதற்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 3 கோடி வழங்கப்பட உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம், எஸ்.டி.ஏ.டி டென்னிஸ் திடலில், சென்னை ஓபன் எனப்படும், 'டபிள்யு.டி.ஏ., 250 சர்வதேச மகளிர் சாம்பியன்ஷிப் - 2025' போட்டி, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, , அக்டோபர், 27 முதல் நவம்பர், 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு, பரிசுத் தொகையாக, 31 லட்சத்து 58,100 ரூபாய் வழங்கப்பட உள்ளது.உலக மகளிர் டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ஆகியவை இணைந்து, இப் போட்டியை நடத்துகின்றன.துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டி: இந்தியாவில் புகழ்பெற்ற, டென்னிஸ் தொடர்களில் ஒன்றான, சர்வதேச டென்னிஸ் போட்டியான, 'சென்னை ஓபன் -2025' சென்னையில் மீண்டும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நமக்கு மிக முக்கி யமான ஆண்டு. தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளோம். இந்த போட்டிக்காக, முதல்வர் ஸ்டாலின், 12 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். அத்துடன் நடப்பு ஆண்டில், ஆசிய சர்பிங், உலகக் கோப்பை ஹாக்கியும் தமிழகத்தில் நடைபெற உள்ளது. சென்னையில் நடக்கவுள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2025 ஆண்டு போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் துணை முதல்வர் உதயநிதிக்கு 2024ம் ஆண்டு மலரை வழங்கினார்.
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கானசர்வதேச வாலிபால் கூட்டமைப்பு சார்பில், உலக வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் இரண்டாவது சீசன் 2026 பல்கேரியாவின் சோபியா நகரில் நடக்க உள்ளன.தாய் லாந்தில் ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப்(16 வயது) நடக்கிறது. இதில் 'ஏ' பிரி வில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும்(தாய் லாந்து, ஆஸ்திரேலியா,சீனா) வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதில் நேற்று உலக வாலிபால் சாம்பியன்ஷிப் முதல் சீசனில் பைனலுக்கு முன்னேறிய வலிமையான உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதல் இரு செட்டை இந்தியா 25-21, 25-16 என கைப்பற்றியது. அடுத்த இரு செட்டுகளை உஸ்பெகிஸ்தான் 25-19, 25,18 என வென்றது.கடைசி,5வது செட்டில் இந்திய அணி 15,13 வென்றது.இந்திய அணி 32 என்ற செட் கணக்கில்முடிவில் வெற்றி பெற்றது. முதன் முறையாக உலக வாலிபால் சாம்பியன் ஷிப்பில் பங்கேற்க தகுதி பெற்றது. இந்திய அணிதற்போது 'இ' பிரிவில் 6 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் ஜப்பானை வீழ்த்தினால்,அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது..