25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Jan 30, 2026

'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் வேலவன் செந்தில்குமார் வெற்றி .

 'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் தொடர்,அமெரிக்காவின்  வாஷிங்டனில் ,ஆண் களுக்கானமுதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், இங்கிலாந்தின் டாம்வால்ஷ் மோதினர். வேலவன் 3-1 என வெற்றி பெற்றார்.இந்தியாவின் வீர் சோட் ரானி 3-2 என ஹங்கேரியின் பாலாஸ் பர்காஸை மற்றொரு முதல் சுற்றில் வீழ்த்தினார்.

Jan 30, 2026

ஆஸ்திரேலியா ஓபன்  பைனலில் சபலென்கா-ரிபாகினா முன்னேற்றம்.

பெலாரசின் சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினாஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலுக்கு முன்னேறினர்.ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில்,. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சப லென்கா, 12வது இடத்தில் உள்ள உக்ரைனின் எலினா ஸ்விடோலினா மோதினர்.ஒரு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 4 வது முறையாக (2023-26) பைனலுக்கு  இத்தொடரில் முன்னேறினார்.

Jan 29, 2026

ஜெசிகா, ரிபாகினா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்அரையிறுதிக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில்,. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ,போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். இதில் ஸ்வியாடெக் 5-7, 1-6என்றசெட்கணக்கில்தோல்வியடைந்தார்.காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-2, 7-6 என, சகவீராங்கனைஅமண்டா அனிசிமோவாவை வென்றார்.. இன்று நடக்கும் அரை யிறுதியில் சபலென்கா (பெலாரஸ்) - ஸ்வி டோலினா (உக்ரைன்), ரிபாகினா (கஜகஸ்தான்) -பெகுலா (அமெரிக்கா) மோதுகின்றனர். 

Jan 29, 2026

இந்திய அணி நான்காவது 'டி-20' கிரிக்கெட் போட்டியில் 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, பங்கேற்று, முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா, தொடரை 3-0 என கைப்பற்றியது. நேற்று விசாகப்பட்டினம் (ஆந்திரா), . ராஜசேகர ரெட்டி மைதானத்தில்நான்காவது போட்டி நடந்தது.நியூசிலாந்து அணி 20 ஓவரில் 215/7 ரன் எடுத்தது. நியூசிலாந்து இத்தொடரில் முதல் வெற்றி பெற்றது இந்திய அணி 18.4 ஓவரில் 165 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. 

Jan 29, 2026

இந்தோனேஷிய பாட்மின்டனில். , வேகம் 380.1 கி.மீ., ஆக பதிவாகி,  அதிவேகமாக பந்தை 'ஸ்மாஷ்' செய்த வீராங்கனை வரிசையில் சிந்து முதலிடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட் மின்டன் தொடர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் ,உலகத் தரவரிசையில் 'நம் பர்-13' ஆக உள்ள இந்தியவீராங்கனை, ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சீனா வின் யு பெய் செனிடம் தோல்விடையந்தார். அப்போது யு பெய் சென் அடித்த பந்தை, சிந்து திருப்பி அனுப்பினார் ('ஸ்மாஷ்' இதன் வேகம் 380.1 கி.மீ., ஆக பதிவானது. இதையடுத்து இந்தோனேஷிய பாட்மின்டனில் அதிவேகமாக பந்தை 'ஸ்மாஷ்' செய்த வீராங்கனை வரிசையில் சிந்து முதலிடம் பிடித்துள்ளார்.

Jan 29, 2026

இந்தியாவின் பிரக்ஞானந்தா டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 9வது சுற்றில் வெற்றி பெற்றார்.

நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நெதர்லாந்தில், இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம் பரம், அர்ஜுன்எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.  ஒன்பதாவது சுற்றில், இந்தியாவின் பிரக்ஞா னந்தா, அரவிந்த் சிதம்பரம் மோதினர். 'நடப்பு சாம்பியன்' பிரக்ஞானந்தா, 84வது நகர்த்தலில் - வெற்றி பெற்றார்.  தலா 4 புள்ளிகளுடன் 9 வது இடத்தை ,இந்தியாவின் அர்ஜுன், குகேஷ், பிரக்ஞானந்தா பகிர்ந்து கொண்டுள்ளனர். அரவிந்த் சிதம்பரம் (2.5 புள்ளி) 14வது இடத்தில் உள்ளார். 

Jan 29, 2026

இந்தியாவின் தருண், மிதுன்மஞ்சுநாத் தாய்லாந்து பாட்மின்டன் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் தாய்லாந்தின் பாங்காக்கில்,. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலகத் தரவரிசையில் 61வது இடத்திலுள்ள இந்தியாவின் மிதுன்மஞ்சுநாத், 41வது இடத்திலுள்ள, இத்தொடரின் 'நம்பர் -8' வீரர் என அந்தஸ்து பெற்ற டென்மார்க் கின் மாக்னஸ் ஜோகன்னெசனை சந்தித்தார்.59 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில்  21-12, 9-21, 21-17 என்ற செட் கணக்கில் மிதுன் மஞ்சுநாத் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் ('நம்பர் -43'), தாய்லாந்தின் கன்டபனை ('நம்பர்-55') எதிர்கொண்டார். தருண் 22-20, 21-17 என்ற நேர் செட்டில்வெற்றி பெற்றார். 

Jan 28, 2026

விளையாட்டு போட்டிகள் 28 th  Jan 2026

'டாடா ஸ்டீல்' செஸ் தொடர் கோல்கட்டாவில் நடந்த பெண்களுக்கான ரேபிட் பிரிவில் இந்தியாவின் பிரிஸ்டி முகர்ஜீ (2022, 2024, 2026) மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ. 20,000 பரிசு, கோப்பை கிடைத்தது.ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் , இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வசந்தி, ருமேனியாவின் பிரியானா ஜோடியை இந்தியாவின் ருடுஜா, சீனாவின் ஜெங் ஜோடி 6-4, 6-3 என வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. ஐதராபாத்தில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொட ரில்  இந்தியாவின் விஷ்ணு வர்தன், மணிஷ் சுரேஷ் குமார் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். 

Jan 28, 2026

'பார்முலா-1' பயிற்சி அகாடமிக்கு தேர்வான முதல் இந்திய வீராங்கனை அட்டிகா மிர்,

காஷ்மீரைசேர்ந்தஇந்தியாவின்இளம்அட்டிகாமிர்,11. ஆண்கள்ஆதிக்கம்செலுத்தும்கார்பந்தயத்தில்,'சிங்கப்பெண்ணாக' சீறுகிறார் . இவர், 'பார்முலா-1' பயிற்சி அகாடமிக்கு தேர்வான முதல் இந்திய வீராங்கனை. டபியுள். எஸ்.கே., சூப்பர் மாஸ்டர் கார்ட் ரேசில், இத்தாலி, லா கன்காவில்நடந்த ஜூனியர் பிரிவில் பங்கேற்றார். தகுதிச் சுற்றில் (49.76 வினாடி) இவர், 2வது இடம் பெற்று சாதித்தார்.இவரது 'கார்ட்' பைனலுக்கு முந்தைய சுற்றில் ,தொழில்நுட்ப பிரச்னையால் 'ஸ்டார்ட்' ஆக வில்லை. பைனலுக்கான பட்டியலில் 18வது இடத்திற்கு பின்தங்கினார். "அறிமுக வீராங்கனையாக தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. பந்தயத்தின் போது, கார்ட்டில் பிரச்னை ஏற்படுவது சகஜம்," என்று அட்டிகா மிர் கூறினார்.

Jan 28, 2026

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் உத்தேச அட்டவணை வெளியானது.

அகில இந்திய கால் பந்து கூட்டமைப்பு சார் பில் (ஏ.ஐ.எப்.எப்.,), கடந்த 2014 முதல் இந்தி யன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர்நடத்தப்படுகிறது. இதன் 15 ஆண்டு ஒப்பந்தம் 2025, டிச.8ல் முடிந்தது.ஒப்பந்தம் புதுப்பிக்கப் படாத நிலையில், 12வது சீசன் நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசின் - தலையீட்டின் பேரில் ஐ.எஸ்.எல்., தொடர்வரும் பிப்.14ல் துவங்குகிறது. இதற்கான உத்தேச அட்டவணை வெளியானது. மொத்தம் 14 அணிகள் பங்கேற்க , 91 போட்டிகள்உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை தலா மோதும்.ஐ.எஸ்.எல்., தொடரில் பிப். 19ல் இருமுறை கோப்பை வென்ற  சென்னை அணி  (2015, 2017-18). தனது முதல் போட்டியில் மும்பைஅணியைஎதிர்கொள்கிறது.சென்னையில் 7 போட்டியில் பங்கேற்க உள்ளது. 

1 2 ... 45 46 47 48 49 50 51 ... 158 159

AD's



More News