இந்தியாவில் பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு. பி.எல்.,) கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடந்த லீக் போட்டியில், குஜராத், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. டில்லி அணி 20 ஓவரில் 171/8 ரன் மட்டும் எடுத்தது. குஜராத் அணி 20 ஓவரில் 174/9 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.
19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 16வது சீசன் ஜிம்பாப்வே, நமீபியாவில், நேற்று 'சூப்பர்-6' போட்டிகள் துவங்கின. 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, ஜிம்பாப்வேயை சந்தித்தது. ஜிம்பாப்வே, 'டாஸ்' வென்று பீல்டிங் தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணி 37.4 ஓவரில் 148 ரன்னுக்கு தோற்றது. இந்திய அணி 50 ஓவரில் 352/8 ரன் குவித்தது. பட்டியலில் இந்தியா (6 புள்ளி) முதலிடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே, வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்தன.
இந்தியாவின் ரந்தீர் சிங் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவரான இவர் உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகினார். உஸ்பெகிஸ்தானில் நேற்று நடந்த ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கத்தாரைச் சேர்ந்த ஷேக் ஜோவான் பின் ஹமாத் அல்தானி புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, 2028-ம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் தொடருவார்.ஷேக் ஜோவான் கத்தார் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி உரிமத்தை கத்தாருக்கு பெறுவதே அவரது இலக்காகும்.
டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜானிக் சினெர் 6–1, 6-3, 7-6 (7-2) என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான லூசியானோ டார்டேரியை வென்று கால் இறுதிக்குள் நுழைந்தார். உலகதரவரிசையில் 6-வது இடம் வகிக்கும், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வென்றனர். மேடிசன் கீசை அமெரிக்கா). டபுள் பால்ட் (6 முறை)மற்றும் பந்தை வலுவாக வெளியே அடிக்கும் தவறுகளை ( 28 முறை) அதிகமாக செய்தது மேடிசனுக்கு பின்னடைவாக அமைந்தது. 4 அமெரிக்க மங்கைகள் பெகுலா, அனிசிமோவா, கோகோ காப், இவா ஜோவிச் கால் இறுதியை அடைந்துள்ளனர். 2001-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் 4 அமெரிக்க வீராங்கனைகள் கால் இறுதிக்கு வந்துள்ளனர்.
20 ஓவர் கிரிக் கெட் போட்டி ,5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் (டபிள்யூ.பி.எல்.) குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 16-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர் கொண்டது. 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. நாட்சிவெர் 100 ரன்களுடன் (57 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. 15ரன்கள் வித்தியாசத்தில்மும்பை அணி வெற்றி பெற்றது.
நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் ,டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் ,13 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு 8-வது சுற்று நடந்தன. இந்தியாவின் குகேஷ் 41-வது நகர்த்தலில் விளாடிமிர் பெடோசீவை (சுலோவேனியா) தோற்கடித்தார். முந்தைய 2 ஆட்டங்களில் தோற்றிருந்த குகேஷ் வெற்றிப பாதைக்கு திரும்பினார்.தமிழகத்தின் பிரக்ஞானந்தா - துருக்கியின் யாஜிஸ் கான் எர்டோக்மஸ் இடையிலான ஆட்டமும், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி-அரவிந்த் சிதம்பரம் மோதிய ஆட்டமும் டிரா ஆனது.8 சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்து சத்தோரோவ் 5% புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜவோகிர் சிந்தாராவ் 5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.4-வது இடத்தை குகேஷ் 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 4 டிரா, 2 தோல்வி) பகிர்ந்துள்ளார்.
மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில், பெண்கள்ஒற்றை யர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, பெலாரசின் சபலென்கா, 55வது இடத்திலுள்ள ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொட போவாவை எதிர்கொண்டார். . 2 மணி நேரம், 4 நிமி டம் நீடித்த இப்போட்டியின் முடிவில் சபலென்கா 7-6, 7-6 என வெற்றி பெற்றார். உலகின் 'நம்பர்-1’ வீரர், ஸ்பெயினின் அல்காரஸ், 32வது இடத்திலுள்ள பிரான்சின் மவுடெட் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் மோதினர். 2 மணி நேரம், 7 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அல்காரஸ், 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் , இந்தியாவந்துள்ள நியூசிலாந்து அணி பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது.நேற்று இரண்டாவது போட்டி, சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவ ரில் 208/6 ரன் எடுத்தது, இந்திய அணி 15.2 ஓவரில் 209/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின் டன் தொடர் இந்தோனேஷியாவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-13' வீராங்கனை, இந்தியாவின் சிந்து, 'நம்பர்-4' ஆக உள்ள சீனாவின் யு பெய் செனை எதிர்கொண் டார். முதல் செட்டை சிந்து 13-21 என இழந்தார்.இரண்டாவது செட்டில் சிந்து 12-11 என முன்னிலையில் இருந்தார். அப்போது பெய் சென் அடித்த பந்து, உள்ளே விழுந்ததாக, 'லைன்' நடுவர் அறி வித்தார். ஆனால் பந்துவெளியே சென்றதாக சிந்து, அதிருப்தி தெரிவித்தார். அப்பீலை எதிர்த்து 'ரீப்ளே' செய்யும் 'சாலஞ்சர்' வாய்ப்பு ஏற்கனவேமுடிந்து விட்டதால், சிந்து ஏமாற்றம் அடைந்தார்.சர்வீசை சந்திக்க சிந்து தயாராக இருந்த போதும், நடுவரின் இச்செயல் அனைவருக்கும் வியப்பு தந்தது. சிந்து கோபமடைந்து, நடுவர்ஜோயர்க்ஹுபெர்டிஸ்(ஜெர்மனி)மைதானத்துக்குஅழைத்துவாக்குவாதம்செய்தார்.முடிவில் 'ரெட் கார்டு' திரும்பப் பெறப்பட்டது.நடுவர் ஜோயர்க்ஹுபெர்டிஸ் (ஜெர்மனி) சிந்துவுக்கு 'எல்லோ கார்டு' காண்பித்தார். அடுத்து 12-16 என பின்தங்கினார் சிந்து. அப்போது, பெய் சென்சர்வீசை எதிர்கொள்ள தாமதம் செய் ததாக தெரிவித்த நடுவர், உடனே 'ரெட் கார்டு' காண் பித்தார். இதனால் பெய் செனுக்கு கூடுதலாக ஒருபுள்ளி (12-17) கிடைத்தது.
பார்வையற்ற பெண் களுக்கான தேசிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனலில் ('டி-20'), புவனேஸ்வரில் ஒடிசா அணி (173/4) 32 ரன் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை (141/5) வென்றது.தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிப் போட்டிடில்லியில், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் திலோத்தமா சென் முதலிடம் பிடித்தார்.சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசனுக்கானலீக் போட்டி அசாமில் கேரளா அணி 3-1 என பஞ்சாப் அணியை வீழ்த்தியது.