25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


விளையாட்டு (SPORTS)

Aug 02, 2025

நேபாள தலைநகர் காத்மாண்டுவில், உலக டேபிள் டென்னிஸ் இந்திய அணிகள் தகுதி

அணிகளுக்கு இடையிலான தெற்காசிய ரீஜினல் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், இலங்கை, வங்கதேசம் என 5 அணிகள் பங்கேற்றன.இந்திய அணி, ஆண்கள் பிரிவில் தனது முதல் போட்டியில் 3,0 என்ற கணக்கில் வங்க தேசத்தை வீழ்த்தியது. அடுத்து நடந்த போட்டிகளில் இலங்கை(3,0), நேபாளம்(3,0), மாலத்தீவு(3,0) அணிகளை வென்றது. நான்கு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, 8 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றியது. அடுத்த ஆண்டு (ஏப். 28 - மே 10) லண்டனில் நடக்கவுள்ள உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றிய இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள்,  விளையாடும் வாய்ப்பை பெற்றன. 

Aug 02, 2025

லக்சயா சென், மக்காவ் பாட்மின்டனில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் லக்சயா சென்('நம்பர்-17'), சீனாவின் ஜுவான் செனை('நம் பர்-77') மக்காவ் சர்வதேச பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் மோதினார்.மூன்று போட்டிகள் முடிவில் லக்சயா 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 2025ல் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். 

Aug 01, 2025

செஸ் திவ்யாவுக்கு நாக்பூர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு !

இளம் வீராங்கனை என சாதனை படைத்தசெஸ் உலக கோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை. இந்தி யாவின் 88வது 'கிராண்ட் மாஸ்டர்' ஆனார். இந்த அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 4வது, சர்வதேச அரங்கில் 44வது வீராங்கனை ஆனார்.மும்பையில் இருந்து நாக்பூர் விமான நிலையத்தை அடைந்த திவ்யாவுக்கு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். பின் காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது முதல் பயிற்சியாளர் மறைந்த ராகுல் 40. எப்படியும் நான் 'கிராண்ட் மாஸ்டர்' ஆகிவிட வேண்டும் என விரும்பினார். கிடைத்த பட்டத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.தன்வெற்றிக்குப் பின் பெண்கள் செஸ் போட்டியை அதிகளவு தேர்வு செய்து விளையாடுவர் என நம்புகிறேன் ,என்று  திவ்யா கூறினார். 

Aug 01, 2025

லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் ஐந்தாவது, கடைசி டெஸ்ட்..

இங்கிலாந்து,2,1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் நேற்று லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது. இங்கிலாந்து,2,1 என முன்னிலையில் உள்ளது. மழை காரணமாக,'டாஸ்' நிகழ்வு 3 நிமிடம் தாமதம் ஆனது. இதில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் போப், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 101/4 ரன் எடுத்திருந்தது. ஜடேஜா (1), கருண் நாயர் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.   

Aug 01, 2025

சர்வதேச பாட்மின்டன்  .

சர்வதேச பாட்மின்டன் தொடர்மக்காவ் நகரில்  ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென்('நம்பர்-17'), இந்தோனேஷியாவின் ஷிகோ ஆரா('நம்பர் 48') மோதினர் முதல் செட்டை 21,14 என வென்ற லக்சயா, அடுத்த செட்டை 1421 என இழந்தார். அடுத்து நடந்த மூன்றாவது செட்டை 21-17 என வசப் படுத்தினார். முடிவில் லக்சயா 21-14, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்... மற்றொரு போட்டியில் தரவரிசையில் 47 வது இடத்திலுள்ள இந்தியாவின் தருண்,15வது இடத்திலுள்ள ஹாங்காங்கின் சியுக் லீயை சந்தித்தார்.. முடிவில் தருண் 19,21/,21,14,/22,20 என போராடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் ஆதித்யா 18,21,/16,21 என மலேசியாவின் ஹோவிடம் தோற்றார். இந்தியாவின் ரக்ஷித்தா (தமிழகம்) பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் 21-14, 10-21, 11-21 என தாய்லாந்தின் புசானிடம் வீழ்ந்தார். ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானின் குமகை, நிஷி ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய  ஜோடி 10-21, 22-20, 21-16  என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

Jul 31, 2025

சர்வதேச பாட்மின்டன்தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி.

 சர்வதேச பாட்மின்டன் தொடர் மக்காவ் நகரில்  ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், தென் கொரியாவின் ஜியோன் மோதினர். முதல் செட்டை 21-8 என கைப்பற்றிய லக்சயா, அடுத்த செட்டை 21-14 என வசப்படுத்தினார். முடிவில் லக்சயா 21-8, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்தியாவின் ஆயுஷ்ஷட்டி 21-10, 21-11 என சீன தைபேவின் ஹூவாங்கை வென்றார். முதல் சுற்றில் பெண்கள் ஒற்றையரில்  இந்தியாவின் ரக்ஷித்தா, தாய்லாந்தின் பர்ன்பிச்சா மோதினர். முதல் செட்டை 18–21 என இழந்த ரக்ஷித்தா, அடுத்த இரு செட்டை 21-17, 22-20 என வசப் படுத்தினார். முடிவில் ரக் ஷித்தா 18–21, 21– 17, 22-20  என வெற்றி பெற்றார். 

Jul 31, 2025

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்கு  முன்னேறிய இந்திய அணி.

உலக ஜூனியர் அணிகளுக்கான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் எகிப்தில்,. 'டி' பிரிவில் இடம் பிடித்த இந்திய ஆண்கள் அணி, முதல் 3 போட்டியில் தென் ஆப்ரிக்கா (3-0), ஜெர்மனியை (3-0), ஜப்பானை (2-1), வென்றுபுள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்று, 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.இதில் கனடாவை 2-0 என வென்றது. அடுத்து நடந்த காலிறுதியில் இந்தியா, தென் கொரியா மோதின. முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் யூஷா நபீஸ், 11-5, 11-5, 11-9 என வென்றார். உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.

Jul 31, 2025

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ஹர்தீப்.

. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (17 வயது) கிரீசில் ,கிரிகோ ரோமன், 110 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் 16 வயது வீரர் ஹர்தீப், ஈரானின் யஸ்டன் எசேவை சந்தித்தார். முதலில் 2-3 என பின்தங்கிய ஹர்தீப், கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட 3-3 என சமன் செய்தார். இருப்பினும், கடைசியாக புள்ளி எடுத்த வீரர் அடிப்படையில் ஹர்தீப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, இத்தொடரில் இந்தியா முதல் தங்கம் வென்றது  பெண்களுக்கான பிரீஸ்டைல்' போட்டியில், 43 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரச்சனா, 13-2 என எகிப்தின் மரியமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். 65 கிலோ போட்டியில் இந்தியாவின் அஷ்வினி, 13-0 என மங்கோலியாவின் அனுஜினை வென்றுஅரையிறுதிக்குள் நுழைந்தார்.

Jul 31, 2025

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட் கிரிக்கெட் தொடர்.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்க   இங்கிலாந்து சென்றுள்ளது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து,2,1 முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் இன்று லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.தற்போது, ஐந்தாவது டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை இழக்கா மல் தப்பிக்கலாம் என்ற நிலையில் இந்தியா களமிறங்குகிறது. 

Jul 30, 2025

செஸ் உலக கோப்பை வென்ற திவ்யாவிற்கு பாராட்டுக்கள்.

பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் ஜார்ஜியாவில்பைனலில் ஹம்பி, திவ்யா என இரண்டு இந்திய வீராங்கனைகளில் திவ்யா, செஸ் உலக கோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார். தவிர இருவரும் 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்றனர்.உலக கோப்பை தொடர் துவங்கும் முன் திவ்யா வலிமையான வீராங்கனை, இவர் வெற்றி பெறுவார் என யாரும் கணிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம், மன உறுதி திவ்யாவிடம் இருந்தது. 12 வயதில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் ஆன போது, பெரிய வீரர் இல்லை. குகேஷிடம் வியத்தகு திறமை உள்ளது.இதுபோன்று தான் திவ்யா. இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக இல்லை என்றாலும், அபூர்வ திறமை உள்ளது.ஆனந்த் போன்ற ஜாம்பவான்கள், புதிய தலைமுறை நட்சத்திரங்களை வழிநடத்திச் செல்வதால், இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. இந்திய செஸ் நட்சத்திரங்கள் உலக அரங்கில் வெற்றி பவனி வருகின்றனர்.

1 2 ... 44 45 46 47 48 49 50 ... 96 97

AD's



More News