25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Mar 24, 2026

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி , கடந்தபிப்ரவரி மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப் பட்டார்.

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி , கடந்தபிப்ரவரி மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப் பட்டார். சமீபத்திய ஆஸ்திரேலிய 'டி-20' தொடரில் இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றியது. இதில் வேகத்தில் அசத்திய அருந்ததி, 3 போட்டியில்  (4/22, 2/30, 2/35) மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்.

Mar 24, 2026

இந்தியாவின் சஜன் பிரகாஷ், சிங்கப்பூர் நேஷனல்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார்.

நேஷ னல்ஸ் நீச்சல் சாம்பியன் ஷிப் தொடர் சிங்கப்பூரில், ஆண்களுக்கான 200 மீ., 'பட்டர்பிளை' பிரிவில், இந்தியா சார்பில் சஜன் பிரகாஷ், திர்தேங்க் பெகுபங்கேற்று.தகுதிச் சுற்றில் பிரகாஷ், சஜன் இரண்டு நிமிடம், 0.78 வினாடியில் வந்து இரண்டாவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் திர்தேங்க் பெகு (2:01.69) மூன்றாவது இடம் பெற்றார். சஜன் பிரகாஷ், திர்தேங்க் பெகு என இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.அடுத்து நடந்த பைனலில், சஜன் பிரகாஷ், ஒரு நிமிடம், 57.09 வினாடியில் கடந்து, இரண்டாவது இடம் பெற, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. சீன தைபேவின் குவான் ஹங் (1:56.18) முதலிடம்,இந்தியாவின் திர்தேங்க் பெகு (2:00.96) 3வது இடம் பெற்றனர்

Mar 24, 2026

உன்னதி ஹூடா போலந்து  சர்வதேச பாட்மின்டனில்   'சாம்பியன்'  .

 சர்வதேச பாட்மின்டன் தொடர் போலந்தில் பெண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் உன்னதி ஹூடா 18, பங்கேற்றார். இத்தொ டரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற உன்னதி, அரை யிறுதியில், 'நம்பர்-4' வீராங்கனை, துருக்கியின் பேராக்கை 21-19, 21-16 என பைனலுக்கு முன்னேறினார்.இதில் உன்னதி, இத் தொடரின் 'நம்பர்-2' வீராங்கனை, உக்ரைனின் போலினா புருரோவாவை எதிர்கொண்டார். இத் தொடரில் முதன்முறையாக முதல் செட்டை இழந்தார்.  அடுத்த இரு செட்களையும் 21-15, 21-8 என கைப்பற்றினார். முடிவில் உன்னதி, 10-21, 21-15, 21-8 என வென்று சாம்பியன் ஆனார்.

Mar 24, 2026

'டி.டி.பி. போகல் 2026' ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஹர்ஸ்சித் 'தங்கம்' வென்றார்.

'டி.டி.பி. போகல் 2026' ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி ஜெர்மனியில் சீனா, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் களமிறங்கினர். இந்தியாவின் ஹர்ஸ்சித் தாமோதரன், நிஷாத் மிலிந்த் நர வானே ஆண்களுக்கான ஜூனியர் பிரிவில்பங்கேற்றனர் வால்ட் 1, 2பிரிவில் சிறப்பாக செயல்பட்ட ஹர்ஸ்சித், 13.525 புள்ளிகள் எடுத்து நான்காவது இடம் பிடித்தார்.பைனலில்வால்ட் 1 பிரிவில்ஹர்ஸ்சித்,13.933 புள்ளிஎடுத்தார்.வால்ட் 2பிரிவில் 13.400 புள்ளிபெற்றார்.  ஹர்ஸ்சித்மொத்தமாக 13.666 புள்ளிஎடுத்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.

Mar 24, 2026

இந்திய நட்சத்திரங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பாட்மின்டனில் 5 தங்கம் உட்பட 17 பதக்கம் கைப்பற்றினர்.

மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் ஸ்பெயினில். ஆண்கள் ஒற்றையரில் பிரமோத், சுகந்த், பெண்கள் ஒற்றையரில் மணிஷா, ஆண்கள் இரட்டையர் பிரிவில் நிதேஷ், ருதிக் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத், மணிஷா ஜோடி என இந்திய நட்சத்திரங்கள் ஐந்து தங்கப் பதக்கங்கள் வென்றனர்.நிதேஷ், ருதிக் ஆண்கள் ஒற்றையரில் பைனலில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தன.  இந்தியாவின் துளசிமதி பெண்கள் ஒற்றையரில் வெள்ளி வசப்படுத்தினார். பிரமோத் /சுகந்த் ஜோடி, ஆண்கள் இரட்டையரில்,கலப்பு இரட்டையரில் ஷிவம், நீரஜ் ஜோடி வெள்ளிப்பதக்கங்கள் பெற்றனர். இந்தியாவின் நீரஜ், ஜகதீஷ், ஷிவம், துள சிமதி/நிதேஷ் ஜோடி  வெண்கலம் கைப்பற்றினர்.மொத்தமாக இத்தொடரில் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்றனர்.

Mar 23, 2026

'போல் வால்ட்' போட்டியில் உலக உள்ளரங்கு தடகளத்தில் , சுவீடனின் டுப்ளான்டிஸ் 4வது தங்கம் வென்றார்.

உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் 21வது சீசன் போலந்தில்,  ஆண்களுக்கு 'போல் வால்ட்' கான போட்டியில் சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ். அதிக பட்சமாக 6.25 மீ., உயரம் தாவிமுதலிடம் பிடித்தார். உலக உள்ளரங்கு தடகளத்தில் டுப்ளான்டிஸ். தொடர்ச்சியாக 4வது தங்கத்தை (2022, 2024, 2025, 2026) தட்டிச் சென்றார். 

Mar 23, 2026

'டி-20'  4வது போட்டியில்நியூசிலாந்துக்கு எதிரான தென் ஆப்ரிக்க அணி, 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்  நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. நேற்று, வெலிங்டனில் 4வது போட்டி நடந்தது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 164/5 ரன் எடுத்தது, நியூசிலாந்து அணி 18.5 ஓவரில் 145 ரன்னுக்கு ஆல்-அவுட் டாகி தோல்வியடைந்தது.  தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது ஆட்ட நாயகன் விருதை எஸ்தர்ஹியுசன் வென்றார்.

Mar 23, 2026

ஐ.எஸ். கால்பந்து லீக் போட்டிசென்னை, கோவா அணிகள் மோதி 1-1 என 'டிரா' ஆனது.

12வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோவா அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் சென்னை அணிக்கு 48வது நிமிடத்தில் இர்பான் யத்வாட் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 88வது நிமிடத்தில் கோவா அணியின் சந்தேஷ்ஜிங்கன் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. மற்றொரு லீக் போட்டி யில் இன்டர் காஷி. பெங்களூரு அணிகள் கோல்கட்டாவில் மோதின.2-1 என்ற கோல் கணக்கில்  பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

Mar 23, 2026

பஞ்சாப் வீரர் திக்விஜய் கிளாசிக் ஸ்னுாக்கரில் திக்விஜய் 'சாம்பியன்' பட்டம் வென்றார்.

சி.சி.ஐ., கிளாசிக் ஸ்னுாக்கர் தொடர் மும்பையில், பைனலில் பஞ்சாப்பின் திக்விஜய் கேடியன், பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் ஆணையம்  பிரிஜேஷ் தமானி மோதி, திக் விஜய் 7-1 (55-59, 88-17, 77-1, 83-73, 76-36, 92-0, 62-53) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட் டத்தை கைப்பற்றினார். திக்விஜய்க்கு, கோப்பையுடன், ரூ.3.5 லட்சம் பரிசுத்தொகையும், இரண்டாவது இடம் பிடித்த பிரிஜேஷிற்கு ரூ. 1.75 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 

Mar 23, 2026

இந்தியாவின் அனாஹத் சிங், அபே சிங் இந்திய ஓபன் ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றனர்.

 இந்திய ஓபன் ஸ்குவாஷ் தொடர் மும்பையில்,  பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் ஹனா மோதாஸ் மோதினர். முதலிரண்டு செட்டை 11-5, 11-6 எனக் கைப்பற்றிய அனாஹத், 3வது செட்டை 9-11 என இழந்தார். 4வது செட்டை 11-6 என தன்வசப்படுத்தினார். மொத்தம் 34 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில்  3-1 (11-5, 11-6, 9-11, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் இந்தியாவின் வீர் சோட்ரானி, அபே சிங் ஆண்களுக்கானபைனலில் மோதி, அபே சிங் 3-0 (11-9, 11-8, 11-4) என்ற கணக்கில்  வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

1 2 ... 50 51 52 53 54 55 56 ... 182 183

AD's



More News