வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
வாலிபால் சாம்பியன்ஷிப் (16 வயது) தாய்லாந்தில் நடக்கிறது.இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் (தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சீனா) வென்றது. அடுத்து வலிமையான உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி,உலக வாலிபால் சாம்பியன்ஷிப் தொடருக்கு (2026, பல்கேரியா) முதன் முறையாக தகுதி பெற்றது.வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, ஜப்பானை சந்தித்தது. முதல் செட்டை இந்தியா 25-21 என கைப்பற்றியது.
அடுத்த செட்டை 12-25 என இழந்த போதும், 3வது செட்டை 25-23 என கைப்பற்றியது. 4வது செட்டை 18-25 என நழுவவிட்டது. வெற்றியாளரை முடிவு செய்யும் 5வது, கடைசி செட்டில் இந்திய அணியினர் 15-10 என கைப்பற்றினர் .முடிவில் இந்திய அணி 3-2 என்ற செட் கணக்கில்'வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றது.
0
Leave a Reply