பெண்கள் உலகக்கோப்பை செஸ் போட்டி.
ஜார்ஜியாவின் பதுமி நகரில் பெண்கள் உலகக்கோப்பை செஸ் போட்டி கால் இறுதியில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை கோனெரு ஹம்பி 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் யுக் சின் சாங்கை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் அரைஇறுதியை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். இன்று நடைபெறும் அரைஇறுதியில் ஹம்பி, சீனாவின் லீ டிங்ஜியை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஆர். வைஷாலி 0.5-1.5 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் டான் ஜோங்யிடம் தோற்று வெளியேறினார். இன்னொரு கால்இறுதியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், சகநாட்டவர் ஹரிகாவை எதிர்கொண்டார். முதல் நாளில் இரு ஆட்டமும் 'டிரா' ஆன நிலையில் நேற்று டைபிரேக்கரில் திவ்யா தேஷ்முக் 2-0 என்ற கணக்கில் ஹரிகாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். அரைஇறுதியில் திவ்யா தேஷ் முக், முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜோங்யிடன் சந்திக்கிறார். ஹம்பி, திவ்யா அரைஇறுதிக்கு வந்திருப்பதன் மூலம் இவர்களில் ஒருவர் குறைந்தது பெண்கள் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெறுவர்.
0
Leave a Reply