29 TH MAY விளையாட்டு போட்டிகள்
பாட்மின்டன்
சர்வதேச பாட்மின்டன் தொடர் சிங்கப்பூரில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி ('நம்பர் -27'), மலேசியாவின் ஹோன் ஜியான், முகமது ஹைக்கல் ஜோடியை ('நம்பர் -41') சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையரில், இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி 21-14, 19-21, 21-17 என சீனதைபேவின் சங், யங் ஜோடியை வீழ்த்தியது.
ஹாக்கி
ஐரோப்பிய நாடுகளில் நடக்கவுள்ள புரோ லீக் போட்டியில் (ஜூன் 14-29) பங்கேற்க சலிமா தலைமையிலான இந்திய பெண்கள் அணி, பெங்களூருவில் இருந்து நெதர்லாந்து சென்றது.
செஸ்
சர்வதேச செஸ் தொடர் நார்வேயில்நடக்கிறது. ஓபன் பிரிவில், நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே) உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் குகேஷ், அர்ஜுன் மோதினர். முடிவில் 62வது நகர்த்தலில் அர்ஜுன் வெற்றி பெற்றார்.
பெண்களுக்கான இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் டிங்ஜீ மோதிய போட்டி டிரா ஆனது. வெற்றியாளரை நிர்ணயிக்க நடந்த 'டை பிரேக்கர்' போட்டியும் டிரா ஆனது.
ஹாக்கி பெண்கள்
அர்ஜென்டினாவில், நான்கு நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் நடக்கிறது. இந்தியா அர்ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்கின்றன. முதலிரண்டு போட்டியில் சிலி, உருகுவேயை வீழ்த்திய இந்தியா, 3வது லீக் போட டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என சம நிலையில் இருந்தது. இந்திய அணிக்கு கனிகா (44வது நிமிடம்) ஒரு கோல் அடித்து கை கொடுத்தார்.முடிவில் இந்திய அணி என 2-0 என வெற்றி பெற்றது.இந்திய அணி, தனது 4வது லீக் போட்டியில் (மே 30) சிலியை மீண்டும் சந்திக்கிறது.
ஸ்குவாஷ்
இங்கிலாந்தின் பர்மிங்காமில் பிரிட்டிஷ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன.இந்தியா சார்பில் இளம் வீராங்கனை அனாஹத் சிங் பங்கேற்கிறார்.
தகுதிச்சுற்று முதல் போட்டியில் அனாஹத் சிங் 3-0 (12-10, 11-3, 11-9) ரஷ்யாவின் ஹேலே வார்டை வீழ்த்தினார். அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் அனாஹத் சிங், இங்கிலாந்தின் மில்லி டாம்லின்சனை எதிர் கொண்டார். இதன் முதல் இரு செட்டை 11-6, 11-6 என வசப்படுத்தினார். அடுத்து நடந்த மூன்றாவது செட்டையும் 11-4 என எளிதாக வென்றார். 23 நிமிடம் நடந்த போட்டி முடிவில் அனா ஹத் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply