ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் குல்வீர் சிங் தங்கம் வென்றார்.
தென் கொரியாவில் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இந்தியா சார்பில் 58 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் 18 வயது பூஜா பங்கேற்றார். 2023ல் நடந்த 23 ஆசிய சாம்பியன் ஷிப்பில் தங்கம் வென்ற இவர், நேற்று அதிகபட்சம் 1.89 மீ., உயரம் தாண்டி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியாவின் குல்வீர் சிங், 13:24.77 நிமிடத்தில் வந்து தங்கப்ப தக்கம் வென்றார். இது ஆசிய சாம்பி யன்ஷிப் சாதனை ஆனது. முன்னதாக 2015ல் கத்தார் போட்டியில் முகமது அல் கார்னி (கத்தார்), 13:34.47 நிமி டத்தில் வந்து இருந்தார்.குல்வீர் வென்ற இரண்டாவது தங்கம் இது. முன்னதாக 10,000 மீ., ஓட்டத்தில் சாதித்து இருந்தார். கோபால் சைனி (1981), பஹ துர் பிரசாத் (1993), லட்சமணனுக்கு (2017) அடுத்து 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற வீரர் குல்வீர் சிங்.
0
Leave a Reply