30 MAY விளையாட்டு போட்டிகள்
தடகளம்
26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் போட்டி நடந்தது. கடைசி நேரத்தில் முந்திய இந்தியாவின் அவினாஷ் சபிள், 8:20.92 நிமிடத்தில் வந்து தங்கம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தின் பைனல் நடந்தது. கடைசி 10 மீ., துாரத்தில் முந் திய இந்தியாவின் ஜோதி, 12.96 வினாடியில் வந்து தங்கம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான 4X400 5., தொடர் ஓட்ட ('ரிலே') பைனல் நடந்தது. இந்தியா சார்பில் துவக்கத்தில் ஜிஸ்னா, அடுத்து ரூபல், ரஜிதா ஓடினர்.கடைசி தமிழகத்தின் சுற்றில் சுபா, மின்னல் வேகத்தில் ஓடி, 3:34.18 நிமிட நேரத்தில் வந்த இந்தியா தங்கம் கைப்பற்றியது. நேற்று ஒரே நாளில் இந்தியா, 3 தங்கம் 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கம் வென்றது.
செஸ்
சர்வதேச செஸ் தொடர் நார்வேயில்நடக்கிறது. ஓபன் பிரிவில், நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன்(நார்வே) உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர்.மூன்றாவது சுற்றில் குகேஷ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை சந்தித்தார்.31வது நகர்த்தலில்,குகேஷ் 42வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
பெண்களுக்கான மூன்றாவது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, ஸ்பெயினின் சாராவை வென்றார். இந்தியாவின் வைஷாலி, 'டை பிரேக்கரில்' சீனாவின் வென்சுனிடம் வீழ்ந்தார். மூன்று சுற்று முடிவில் உக்ரைனின் அனா முஜிசக் (6.0), ஹம்பி (6.0), சீனாவின் டிங்ஜீ (4.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.
குத்து சண்டை
சர்வதேச குத்துச்சண்டை தாய்லாந்தில்,தொடர்தாய்லாந்தில், நடக்கிறது. ஆண்களுக்கான 90 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நமன் தன்வர், உஸ்பெகிஸ்தானின் ஜூராபோவ் எலியோர்பெக் மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நமன் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்
பெண்களுக்கான அரையிறுதியில் ஏமாற்றிய இந்தியாவின் தமன்னா (51 கிலோ), லால்பாக் மாவி (80 கிலோ), பிரியா (57 கிலோ) வெண்கலம் கைப்பற்றினர்.
0
Leave a Reply