26வது ஆசிய தடகளத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தங்கம் வென்றார்.
26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் நேற்று துவங்கியது. 43 நாடுகளில் இருந்து 2000 வீரர், வீராங்கனைகள் . பங்கேற்கின்றனர். ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியாவின் குல்வீர் சிங் 26, சிறப்பாக செயல்பட்டார்.
ஆண்களுக்கான 20 கி.மீ., நடை பந்தயம் நடந்தது. இந்தியாவின் செர்வின் செபாஸ்டியன், ஒரு மணி நேரம், 21 நிமிடம், 13.60 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியாவின் அன்னு ராணி, அதிகபட்சம் 58.30 மீ., துாரம் மட்டும் எறிய, 4வது இடம் தான் கிடைத்தது.
ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் அரையிறுதியில் அசத்திய இந்தியாவின் விஷால் தென்னரசு (46.05 வினாடி) பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு வீரர் ஜெய்குமார் (46.87) முதல் அரையிறுதியில் 4 வது இடம் பிடித்து வெளியேறினார்.
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் வித்யா (53.32), ரூபல் (53.00) வெற்றி பெற்றனர். உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சர்வேஷ் (2.10 மீ.,) பைனலுக்கு தகுதி பெற்றார்.
0
Leave a Reply