ஐந்து போட்டி கொண்ட‘டி-20' தொடரில் இந்தியாஇலங்கை பெண்கள் அணி, முதல் நான்கு போட்டியிலும் இந்தியா வென்றது. ஐந்தாவது போட்டி நேற்று, திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதானத்தில் நடந்தது.துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ரேணுகாவுக்குநேற்று ஓய்வு தரப்பட்டது. ஸ்னே ராணா அணிக்கு திரும்பினார். இலங்கை அணி 20 ஓவரில் 160/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், தர வரிசை பட்டியல் வெளியானது. இந்திய அணி துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பேட்டர்வரிசையில் (767 புள்ளி), 3வது இடத்தில் தொடர்கிறார். முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியாவின் பேத் மூனே (794), வெஸ்ட் இண்டீசின் ஹீலே (774) உள்ளனர். இந்தியாவின் தீப்தி சர்மா பவுலர்கள் வரிசையில் (738), 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான 3வது போட்டியில் 4 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா (705), 8 இடம் முன்னேறினார்'ஆல் ரவுண்டர்' வரிசையில் தீப்தி சர்மா (387) 3வது இடத்தில் தொடர்கிறார்.
ஹாங்காங்கில் சர்வ தேச ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஹாங்காங்கில் ,இந்தியாவின் இளம்பரிதி, அபிஜீத் குப்தா, விசாக் உட்பட மொத்தம் 131 பேர் பங்கேற்றனர்.இந்திய வீரர்கள் விசாக், இளம்பரிதி 9வது, கடைசி சுற்றில் மோதினர். இப்போட்டி 28 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் அமர்டுவ்சின், 7.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றினார்.விசாக் (7.0), சீனாவின் பெங்ஜியாங்ஜியன் (7.0) சமபுள்ளி பெற்றனர்.'டை பிரேக்கர்' புள்ளியில் முந்திய ஜியாங்ஜியன், வெள்ளி வென்றார். விசாக்கிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
கோல் மழை பொழிந்த, போர்ச்சுகல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் ரெனால்டோ, 40., சர்வதேச அளவில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதலிடத்தில் (226 போட்டி, 143 கோல்)உள்ளார். அடுத்த இடங்களில் மெஸ்ஸி, (அர்ஜென்டினா, 196 போட்டி, 115 கோல்), அலி டேஜ் (ஈரான், 148 போட்டி, 108 கோல்), சுனில் செத்ரி (இந்தியா, 157 போட்டி, 95 கோல்) உள்ளனர். கிளப் அணிக்காக 813 + போர்ச்சுகல் அணிக்கு 143 சேர்த்து 1297 போட்டியில் 956 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் மெஸ்ஸி (896 கோல்) உள்ளார்.1000 கோல் எட்ட, ரொனால்டோவுக்கு இன்னும் 44 கோல் தான் தேவை. .1000 கோல் அடித்து சாதிப்பேன்," என கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்தார் வரும் 2026ல் நடக்கும் உலக கோப்பை தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார். 2016ல் போர்ச்சுகல் அணிக்கு யூரோ கோப்பை பெற்று தந்த இவர், முதல் முறை யாக உலக கோப்பையை வெல்லமுயற்சிக்கலாம்.
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம் பியன்ஷிப் டில்லியில், பெண்களுக்கான 'டிராப்' பிரிவு தகுதிச் சுற்றில் மத்திய பிரதேசத்தின் பிரகதிதுபே (117), நீருதண்டா (114) முதலிரண்டு இடம் பிடித்தனர்.நீரு தண்டா அடுத்து நடந்த பைனலில், 41 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து, தங்கத்தை வென்றார். கஜகஸ்தானில் சமீபத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றிருந்தார். பிரகதி துபே, நீரு தண்டா, மணிஷா கீர் அடங்கிய ,மத்திய பிரதேச அணி, பெண்கள் அணிகளுக்கான 'டிராப்' பிரிவில், 339 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே டில்லி, பஞ்சாப் அணிகள் தட்டிச் சென்றன.டில்லி (323 புள்ளி), தமிழகம் (295), ராஜஸ்தான் (274) ஜூனியர் பெண்கள் அணிகளுக்கான 'டிராப்' பிரிவில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்..
இன்று நடக்கஉள்ள 5வது 'டி-20' போட்டி இந்தியா, இலங்கை பெண்கள் அணிகள் மோதும்.. இதில் வென்றால் இந்திய அணி 5-0 என தொடரை முழுமையாக வெல்லலாம்.முதல் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 4-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.5வது, கடைசி போட்டி இன்று, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.
.கத்தார் தலைநகர் தோகாவில், உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்' 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.முதலில் 'ரேபிட்' பிரிவு போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி 38, ஓபன் பிரிவில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 22, வெண்கலம் கைப்பற்றினர்.உலக 'ரேபிட்' பிரிவில் 5 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார் ஹம்பி.ஏற்கனவே 2 தங்கம் (2019, 2024), ஒரு வெள்ளி (2023), ஒரு வெண்கலம் (2012) வென்றிருந்தார். விஸ்வநாதன் ஆனந்திற்கு பின், இத்தொடரில் பதக்கம் கைப்பற்றிய 2வது இந்திய வீரரானார். இப்போட்டி மீதான இவர்களது அர்ப்பணிப்பு பாராட்டத் தக்கது. இவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்,' என, அர்ஜுன், ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இந்தியாவின் ஹம்பி உலக 'ரேபிட்' சாம்பியன்ஷிப்பில் 7வது சுற்று முடிவில் 6 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார் .உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் ,முதலில் 'ரேபிட்' சுற்றுக்கான போட்டிகள் நடக்கின்றன. இந்தியா சார்பில் அர்ஜுன், பிரக்ஞானந்தா, கார்ல்சன் உட்பட, மொத்தம் 247 பேர் பங்கேற்றுள்ளனர். 8வது சுற்றில் சகவீரர் நாராயணனை அர்ஜுன்வென்று,. 8 சுற்று முடிவில் அர்ஜுன் 6.5 புள்ளியுடன் 5வது இடத்துக்கு முன்னேறினார். குகேஷ் (8.5) 8, நிஹால்சரின் (6.0) 16 வது இடங்களில் உள்ளனர்.141 பேர் பெண்கள் பிரிவில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் ஹம்பி, 7வது சுற்றில் ஸ்பெயினின் சாராவை வென்றார். உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, சீனாவின் டிங்ஜீ மோதிய 7வது சுற்று 'டிரா' ஆனது.இந்தியாவின் ஹம்பி, 6.0 புள்ளியுடன் , ஏழு சுற்று முடிவில் முதலிடத்துக்கு முன்னேறினார். ஹரிகா (5.5) 5,திவ்யா (5.0) 10வது இடங்களில் உள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் போபாலில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் போட்டி நடந்தது. கர்நாடக வீராங்கனை திலோத்தமா, 591 புள்ளியுடன் தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து, பைனலுக்குள் நுழைந்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட திலோத்தமா 17, மொத்தம் 466.9 புள்ளி எடுத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கேரளாவின் விதர்சா, (462.9), ரயில்வேயின் அயோனிகா (451.8) அடுத்த இரு இடம் பெற்று, வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
இந்திய பெண்கள் அணி நான்காவது 'டி-20' போட்டியில் 30 ரன் வித்தியாசத்தில்இலங்கையை வென்றது. ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி வர்மா அரை சதம் கடந்தனர்.ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொட ரில் ,முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா,3-0 , நேற்று, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடந்த , நான்காவது போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்தது,இலங்கை அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 4-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகி விருதை ஸ்மிருதி வென்றார். ஐந்தாவது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளது.