மல்யுத்த ரேங்கிங் பெண்களுக்கான பிரீஸ்டைல் தொடரில் தங்கம் வென்ற அன்டிம்
மல்யுத்த ரேங்கிங் தொடர் மங்கோலியாவில் நடக்கிறது. பெண்களுக்கான பிரீஸ்டைல் போட்டி நடந்தன. இந்தியாவின் அன்டிம் (53 கிலோ), பைனலில் ரஷ்யாவின் நடாலியாவை 10-0 என வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார்.
57 கிலோ பிரிவு பைன லில் இந்தியாவின் நேஹா, 4-0 என மங்கோலியாவின் போலூர்டுயாவை வென்று, தங்கம் வசப்படுத்தினார்.மற்ற இந்திய வீரா ங் க னைகள் ஹர்ஷித்தா (72). முஸ்கான் (59) தங்களது பிரிவில் பங்கேற்ற போட்டியிலும் வென்று, தங்கம் தட்டிச் சென்றனர். 50 கிலோ போட்டியில் நீலம் வெண்கலம் வென்றார்.
ஆண்களுக்கான கிரிகோ போட்டிகள் ரவுண்டு ராபின்' முறையில் நடந்தன. 55 கிலோ பிரிவில் 4 போட்டியில் இந்தியாவின் அனில் மோர், தங்கம் கைப்பற்றினார். மற்ற இந்திய வீரர் கள் நிஷாந்த் (77), கரண் கம்போஜ் (87), நீரஜ் (67) வெண்கலப் பதக்கம் கைப் பற்றினர். நேற்று நடந்த 7 பிரிவுகளில் இந்தியாவுக்கு 6 பதக்கம்( 1 தங்கம், 2வெள்ளி, 3 வெண்கலம்) கிடைத்தன.
இதுவரை இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி,4 வெண்கலம் என மொத்தம் 2 பதக்கம் கைப்பற்றியுள்ளது.
0
Leave a Reply