02 JUNE விளையாட்டு போட்டிகள்
ஹாக்கி
நான்கு நாடுகள்பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் அர்ஜென்டினாவில் நடக்கிறது. இந்தியா, அர் ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்கின்றன. முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா, 4வது போட்டியில் சிலியிடம் தோல்வியடைந்தது. இந்திய அணி, தனது 5வது போட்டியில் நேற்று உருகுவே அணியை மீண்டும் சந்தித்தது.
விறுவிறுப்பான இப் போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. இந்திய அணிக்கு துணை கேப்டன் ஹினா (10வது நிமிடம்), லால்ரின்புய் (242) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
பின்போட்டியின்முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் கீதா, கனிகா, லால்தான்ட் லுவாகி தலா ஒரு கோல் அடித்து கை கொடுக்க இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது
செஸ்
நார்வேயில், சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் 5வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜூன், 48வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் குகேஷ் (கருப்பு), சீனாவின் யி வெய் (வெள்ளை) மோதினர். இதில் குகேஷ் 56வது நகர்த்தலில் தோல் வியடைந்தார்.
ஐந்து சுற்றுகளின் முடிவில் அர்ஜுன் 6.0 புள்ளி களுடன் 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் கார்ல்சன் (9.5 புள்ளி), கருவானா (8), நகமுரா (6.5) உள்ளனர். கடைசி இரு இடங்களில் யி வெய், குகேஷ் (தலா 5.5 புள்ளி) உள்ளனர்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, சீனாவின் லீ டிங் ஜீயை வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீராங்கனை வைஷாலி, ஸ்பெயினின் சாராவை தோற்கடித்தார்.
மல்யுத்தம்
மங்கோலியாவில், சர்வதேச மல்யுத்த ரேங்கிங் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 61 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் உதித், மங்கோலியாவின்துமென் பிலெக் மோதினர். இதில் உதித் 4-6 என்ற கணக்கில் தோல்வி யடைந்து வெள்ளிப்பதக் கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 'பிரீஸ் டைல்' 57 கிலோ பிரிவு 3-4வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத், துருக்கியின் பெகிர் கேசர் மோதினர். இதில் அமன் 12-2 என வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.இத்தொடரில் இந் தியாவுக்கு 6 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என, மொத்தம் 21 பதக்கம் கிடைத்தது.
0
Leave a Reply