25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Jan 02, 2026

பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் சங்கமிக்கும் ஆசிய விளையாட்டு.

 குளிர்கால ஒலிம்பிக் ,பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் சங்கமிக்கும் (இத்தாலி, பிப்.6-22), காமன்வெல்த் விளையாட்டு (ஸ்காட்லாந்தில் ஜூலை 23-ஆகஸ்டு2), 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் (ஜப்பானில் செப்.19 முதல் அக்.4 வரை) ஆகிய போட்டிகளையும் 2026-ம் ஆண்டு நடக்க இருக்கிறது. பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன் போன்ற கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள், பார்முலா 1 கார்பந்தயம், டூர் டி பிரான்ஸ் சைக்கிளிங் போன்ற வழக்கமான பந்தயங்களும் பார்வையாளர்களை கவரும் போட்டிகளாகஇருக்கும்.

Jan 02, 2026

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடக்கிறது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடக்கிறது. இடம் மற்றும் தேதி இன்னும் முடிவாகவில்லை.. 8 வீரர்கள் இடையிலான கேண்டிடேட் செஸ் போட்டி மார்ச் 28-ந் தேதி முதல் ஏப்ரல் 16-ந்தேதி வரை சைப்ரசில் நடக்கிறது.

Jan 02, 2026

16 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை ஹாக்கி .

16 அணிகள் பங்கேற்கும் இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து 16-வது ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி  போட்டி ஆகஸ்டு 14-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது.இந்திய அணி 1975-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போராடும் ,51 ஆண்டு கால ஏக்கத்தை தணிக்குமா என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது. அதே நாளில் அங்கேயே பெண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி  போட்டியும் நடத்தப்படுகிறது.

Jan 02, 2026

10-வது, 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.

.பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடக்கஉள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்திய அணி சூர்ய குமார் யாதவ் தலைமையில் களம் காணுகிறது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு ,எந்த 20 ஓவர் தொடரையும் இழக்காமல் இந்திய அணி முதல் முறையாக உள்ளூர் சூழலில், முழுவீச்சில் ஆயத்தமாகிறது.ஐ.சி.சி. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 12-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரை பெண்களுக்காக இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி அதே உத்வேகத்தில் 20 ஓவர் உலகக் கோப்பையையும் வெல்ல ஆர்வம் காட்டுகிறது.

Jan 02, 2026

கிரிக்கெட், கால்பந்து, செஸ் ரசிகர்கள் உற்சாகம் ! உலகக் கோப்பை போட்டிகள் நிறைந்த 2026-ம் ஆண்டு ! 

 விளையாட்டு ரசிகர்களுக்கு  புதிதாக பிறந்துள்ள 2026-ம் ஆண்டு பெரும் விருந்து படைக்கும் ஆண்டாக அமையப்போகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் நிறைய முக்கியமான போட்டிகள் அரங்கேறப் போகின்றன. 

Jan 01, 2026

அர்ஜுன் உலக செஸ் பிளிட்ஸ் சாம்பியன் ஷிப்பில் வெண்கலம் வென்றார்.

உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர்  கத்தார் தலைநகர் தோகாவில், முதலில் 'ரேபிட்' பிரிவு போட்டிகள் நடந்தன.  இந்தியாவின் அர்ஜுன் 22, பெண்கள் பிரிவில் இந்தி யாவின் கொனேரு ஹம்பி 38, இதன் ஓபன் பிரிவில் ,வெண்கலம்கைப்பற் றினர்.அடுத்து, 'பிளிட்ஸ்' முறையில் (அதிவேகம்) ,மொத்தம் 19 சுற்று போட்டிகள் நடந்தன. இந்தி யாவின் அர்ஜுன், 15.0 புள்ளியுடன் முதலிடம்பிடித்தார். அமெரிக்காவின் பேபியானோ (14.0), ஐந்து முறை உலக சாம்பி யன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் (13.5), உஸ் பெகிஸ்தானின் நாடிர்பெக் (13.0) அடுத்த 3 இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர்.ஆனந்த், வைஷாலிக்குப் பின் உலக 'பிளிட்ஸ்' தொடரில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஆனார் அர்ஜுன். .உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' என ஒரு தொட ரின், இரு பிரிவிலும் பதக்கம் வென்றஆனந்துக்குப் பின், அர்ஜுன் 2வது இந்திய வீரர் ஆனார் அர்ஜுன்.

Jan 01, 2026

'டி-20' அரங்கில் ஒரு ஆண்டில் அதிக 'ஸ்டிரைக் ரேட்' கொண்ட வீரர் என, இந்தியாவின் அபிஷேக் சர்மா புதிய சாதனை .

துவக்க வீரர் அபிஷேக் சர்மா 25. ரோகித் சர்மா ஓய்வுக்குப் பின், இந்திய 'டி-20' அணியின் 'டி-20' அரங்கில் ரன் குவித்து  வருகிறார்.சர்வதேச பேட்டர் தரவரிசையில் 908 புள்ளியுடன் உலகின் 'நம்பர்-1 வீரராக திகழ்கிறார். இந்தியா, பஞ்சாப், ஐதராபாத் (பிரிமியர் தொடர்) அணிகளுக்காக ரன் மழை பொழிகிறார். 2025ம் ஆண்டில் இவர் மொத்தம் 1602 ரன் எடுத்துள்ளார். உள்ளூர், சர்வதேச 'டி-20'ல் ஒரு ஆண்டில் குறைந்தது,1000 ரன் எடுத்த வீரர்களில், 200க்கும் மேல் என பேட்டிங் 'ஸ்டிரைக் ரேட்' வைத்துள்ள முதல் வீரர் என சாதனை படைத்தார் அபிஷேக். கடந்த ஆண்டு விளையாடிய அனைத்து போட்டியிலும் இவரது பேட்டிங் 'ஸ்டிரைக் ரேட்' 202.01 ஆக உள்ளது.

Jan 01, 2026

வைதேகி.ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் .

இந்தியாவின் ஆமதாபாத்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இந்தியாவின்ஆமதாபாத்தில் ,ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி sowdhri, சக வீராங்கனை பிரதியூஷாவை எதிர் கொண்டு ,முதல் செட் 6-4  , அடுத்த செட்டை 6-1 என வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் செய்லி, சந்தீப்தி, பூஜா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.இந்தியாவின் சோஹா, தம்ஹன்கர், தேபாஸ், அரோரா (அமெ ரிக்கா) ஜோடி, பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினர்.

Jan 01, 2026

புரோ மல்யுத்த ஏலத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத்தை வாங்க புரோ மல்யுத்த ஏலத்தில் வாங்க போட்டி .

2026 ஜன. 15 முதல் பிப். 1 வரை  புரோ மல்யுத்த லீக் 5வது சீசன் இந்தியாவில்,  நடக்கவுள்ளது. ஹரி யானா, மும்பை, பஞ்சாப், டில்லி, மகாராஷ்டிரா, உ.பி., என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.2026  ஜன. 3ல் டில்லியில் இதற்கானவீரர், வீராங் கனைகள் ஏலம், நடக்கவுள்ளது. இதில் இந்திய வீரர் அமன் ஷெராவத்தின் 21, அடிப்படை ஏலத் தொகை ரூ.18 லட்சமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.பாரிஸ் ஒலிம்பிக் (2024), ஆசிய விளையாட் டில் (2022) வெண்கலம் வென்றிருந்தார் . ஜப்பான் வீராங்கனை ,ஒலிம்பிக்கில் பதக்கம் 2020ல் தங்கம், 2024ல் வெண்கலம்) வென்ற யுய் சுகா சியின் அடிப்படை ஏலத்தொகை ரூ. 18 லட்சமாக உள்ளது. ரூ.10 லட்சமாக உலக சாம்பியன்ஷிப் (வெள்ளி), ஆசிய விளை யாட்டு (வெள்ளி), காமன் வெல்த் விளையாட்டில் (தங்கம்) பதக்கம் வென்ற இந்திய வீரர் தீபக் புனியா, காமன்வெல்த் விளையாட் டில் தங்கம் கைப்பற்றிய நவீன், இந்திய வீராங்கனைகளான அன்டிம் பங்கல், அன்ஷு மாலிக் ஆகியோர் ஆகியோரது அடிப்படைஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.7 லட்சம் பிரிவில் மற்றொரு இந்திய வீரர் சுஜீத் கல்கல், இடம் பெற்றுள்ளார்..

Dec 31, 2025

ஆத்யா கட்யல் தேசிய துப்பாக்கி சுடுதலில்  தங்கப் பதக்கம் வென்றார்.

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் டில்லியில், ஜூனியர் பெண்களுக்கான 'டிராப்' பிரிவு தகுதிச் சுற்றில் டில்லியை சேர்ந்த ஆத்யா கட்யல், 15 வயது ,112 முறை இலக்கை தாக்கினார். சிறப்பாக செயல்பட்ட ஆத்யா, 42 முறை இலக்கை தாக்கி, சிறப்பாக செயல்பட்டுமுதலிடம் பெற்று தங்கம் தட்டிச் சென்றார். சபீரா (41) வெள்ளி தமிழகத்தின் தனிஷ்கா (28) வெண்கலம் வென்றனர்.தமிழகத்தின் தனிஷ்கா, நிலா, ஆந்த்ரா இடம் பெற்ற அணி, 295 புள்ளிஎடுத்து அணிகளுக்கான பிரிவில் இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் வென்றனர். டில்லியின் ஆத்யா, பாவ்யா, அனன்யா (323) இடம் பெற்ற அணி தங்கம் வென்றனர்.274 புள்ளி எடுத்த ராஜஸ்தானுக்கு (தர்ஷனா, மைத்ரேயி, மஹிகா) வெண்கலம் கிடைத்தது. 

1 2 ... 55 56 57 58 59 60 61 ... 158 159

AD's



More News