27 MAY விளையாட்டு போட்டிகள்
வில்வித்தை
உலக தரவரிசை வெரோனிகா கோப்பை வில்வித்தை போட்டிசுலோவேனியாவில் நடந்தது. ஆண்கள் தனிநபர் காம் பவுண்டு பிரிவில் இந்தியாவின் பிரதமேஷ் பாலசந்திர பியூஜ், முன்னாள் உலக சாம் பியன், ஆஸ்திரியாவின் நிகோ வியனர்(காலிறுதி), சக வீரர் பிரதமேஷ் ஜவஹரை(அரையிறுதி) வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.இதில் நடப்பு சாம்பியன் ஈரானின் ஷமாய் யம்ரோமை எதிர்கொண்டார். முதலில் பின்தங்கிய பிரதமேஷ், பின் சிறப்பாக செயல்பட போட்டி148,148 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி'ஷூட் ஆப்' முறைக்கு சென்றது. இதில் அசத்திய பிரதமேஷ், தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
பாட்மின்டன்
சிங்கப்பூர் ஓபன்'சூப்பர்750' தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் ஒற்றையர் பிரிவில் சிந்து, பிரனாய் முத்திரை பதிக்கலாம். இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடி சாதிக்கலாம்.
குத்துச்சண்டை
பாங்காக்கில் நடக்கும் தாய்லாந்து சர்வதேச ஓபன் தொடரின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை சஞ்சு (60 கிலோ பிரிவு) முன்னேறினார். அன்ஷுல் கில்லும் (90+) அரையிறுதிக்கு தகுதி.
துப்பாக்கிசுடுதல்
ஜெர்மனியில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் நடக்கிறது. இதில் பெண்களுக்கான25 மீ., பிஸ்டல் பிரிவில் போட்டி நடந்தது. இந்தியாவின் தேஜஸ்வினி,575 புள்ளி எடுத்து4வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.அடுத்து துவக்கத்தில் பைனலில் இருந்தே அசத்தினார். முடிவில்31புள்ளியுடன் முதலிடம் பெற்று,தங்கம் கைப்பற்றினார்.இத்தொடரில் இந்தியா வென்ற3வது தங்கம். இதுவரை3 தங்கம்,4 வெள்ளி,4 வெண்கலம் என11 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
ஹாக்கி
நான்கு நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் அர்ஜென்டினாவில்நடக்கிறது.இந்தியா, அர்ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்தியா, சிலியை வீழ்த்தியது.நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்தியா, உருகுவேயை எதிர் கொண்டது.3வது நிமிடம் கிடைத்த பெனால்டி கார்னரில் உருகுவேயின் செய்கல் ஒரு கோல் அடித்தார். இந்தியாவின் சோனம் (21) ஒரு கோல் அடித்தார். மறுபக்கம் அகஸ்டினா (24, உருகுவே ) கோல் அடிக்க, இந்தியா1,2 என பின்தங்கியது.46 வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார் கனிகா. தொடர்ந்து அசத்திய இவர், பீல்டு கோல் (50) அடித்து கைகொடுக்க, இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஈட்டி எறிதல்
6வது உலக பாரா தடகள கிராண்ட் ப்ரி போட்டி சுவிட்சர்லாந்தில்நடந்தது.ஆண்களுக்கான எப்.42 பிரிவு ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் பங்கேற்றார் மகேந்திர குர்ஜார்27. ராஜஸ்தானை சேர்ந்த இவர், முதல் இரு வாய்ப்பில் 56.11, 55.51 மீ.துாரம் எறிந்தார்.
மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சம்61.17 மீ., துாரம் எறிந்தார். இது புதிய உலக சாதனை ஆனது. கடைசி3 வாய்ப்பில் மகேந்திர குர்ஜார் (58.54, 57.25, 58.07 மீ.,) ஏமாற்றினார். எனினும் தங்கம் கைப்பற்றி அசத்தினார்.
100 மீ., டி 46 பிரிவில் இந்தியாவின் பெருமாள்சாமி சந்தனகுமார், 12.31 வினாடியில் வந்து, வெள்ளி வென்றார்.
400 மீ., (டி 11) போட்டியில் இந்தியாவின் மூர்த்தி பிரகதீஷ்வர ராஜா (01 நிமிடம், 01:59 வினாடி) இரண்டாவது இடம் பெற்றார்.
ஈட்டி எறிதல் எப் 64 பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் அதிக பட்சம் 72.35 மீ., எறிந்து முதலிடம் பிடித்தார்.
0
Leave a Reply