28 TH MAY விளையாட்டு போட்டிகள்
பாட்மின்டன்
சிங்கப்பூரில் சர்வதேசபாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது.பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, கனடாவின் வென்யு ஜங்கை சந்தித்தார். சிந்து 21-14, 219 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்
கால்பந்து
சவுதி அரேபியாவில் 'சவுதி புரோ லீக்' கிளப் கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 18 அணி கள் பங்கேற்றன. உலகின் முன்னணி வீரர் போர்ச் சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 40, இடம் பெற்ற அல்நாசர் அணி, தனது கடைசி லீக் போட்டியில் அல்படே அணியை சந்தித்தது. இதில் அல் நாசர் அணி 2-3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்விய டைந்தது. 70 புள்ளியுடன் (34 போட்டி, 21 வெற்றி,7'டிரா',6 தோல்வி) பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. இப்போட்டியில் 42வது நிமிடம் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து கிளப் கால்பந்து அரங்கில் 800 கோல் அடித்த முதல் வீரர் ஆனார்.இந்தசீசனில் 25 கோல் அடித்து 'கோல்டன் பூட்' (தங்க ஷூ) தட்டிச் சென்றார்.
கிரிக்கெட்
'ஆப்பரேஷன் சிந்தார்' வெற்றியை கொண்டாடும் வகையில், ஆமதாபாத்தில் நடக்க உள்ள பிரிமியர் கிரிக்கெட் பைனலை (ஜூன் 3) காண இந்திய முப்படை தளபதிகளுக்கு பி.சி.சி.ஐ., அழைப்பு.பிரிமியர் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்தன. இன்று ஓய்வு நாள். நாளை முதல் 'பிளே ஆப் சுற்று துவங்குகிறது.
0
Leave a Reply