25 MAY AND 26 MAY விளையாட்டு போட்டிகள்
செஸ்
புதுக்கோட்டையை சேர்ந்தவர் அங்கப்பன், 27. ஒன்றரை வயதில் 'மஸ்குலர் டிஸ்டரபி' பாதிப்பு ஏற்பட, நடக்க முடியவில்லை. வீல் சேரில் மனஉறுதியுடன் முன்னேறினார். பி.காம்., பட்டம் பெற்றார். சி.ஏ., படித்து வருகிறார். செஸ் விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். தற்போது, 'ஆர்' பிட்டர்' அளவுக்கு உச்சம் தொட்டுள்ளார்.
திருச்சியில் சிறிய அளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்றேன். ஆரம்பத்தில் நிதி நெருக்கடி, பயணம் செய்வதில் பிரச்னை இருந்தது. எனக்கு ஆதரவாக அப்பா, அம்மா இருந்தனர்.
சென்னை, ஒலிம்பியாட் (2022) போட்டியின் போது, 'பிடே' செஸ் 'ஆர்' பிட்டர்' தேர்வில் வெற்றி பெற்றேன். பின் 'ஆன் லைனில்' சர்வதேச 'ஆர் பிட்டர்' தேர்வில் 'பாஸ்' செய்தேன். இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி'ஆர்பிட்டர்' ஆனேன். 'ஆர்பிட்டர்' என்பது அம்பயர் போன்றது. சர்வதேச போட்டிகளில் 'ரிசல்ட்' அறிவிப்போம். செஸ் போர்டில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம். இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி சர்வதேச 'செஸ் ஆர்பிட்டர்' என சாதனை படைத்திருக்கிறார் அங்கப்பன்.
டென்னிஸ்
ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் ஜார்ஜியாவில் நடக் கிறது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி, ஜப்பானின் இமாமுரா, தஜிமா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 6-1 என எளிதாக கைப்பற்றியது. அடுத்த செட்டை 3-6 என கோட்டை விட்டது. 58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி. 6-1, 3-6, 5-10 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தது.
துப்பாக்கி சுடுதல்
ஜெர்மனியில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) நடக்கிறது. இதன் 10 மீ., 'ஏர் ரைபிள்' கலப்பு அணிகள் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் நரேன் பிரனவ், கியாதி சவுத்ரி ஜோடி 631.0 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தது.
மற்றொரு இந்திய ஜோடியான ஷாம் பவி ஷ்ராவன், ஹிமான்ஷு ஜோடி 314.0 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது.
அடுத்து நடந்த பைனலில் நரேன்,கியாதி ஜோடி 1416 என சீனாவின் யுடிங், லிவான்லின் ஹுவாங் ஜோடி யிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது. பின் 3,4வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் ஷாம்பவி, ஹிமான்ஷு ஜோடி 17,9 என அமெரிக்காவின் ஸ்பென்சர், கிரிப்பின் லேக் ஜோடியை வீழ்த்தி வெண்கலத்தை கைப்பற்றியது.இதுவரை 2 தங்கம்,4 வெள்ளி,வெண்கலம் என 10 பதக்கம் கைப்பற்றி இந்தியா, 2வது இடத்தில் உள்ளது.
பாட்மின்டன்
'சூப்பர் 500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின்ஸ்ரீகாந்த், சீனாவின் லி ஷி பெங் மோதினர். முதல் செட்டை 11-21 என இழந்த ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டை 9-21 என கோட்டை விட்டார். மொத்தம் 36 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 11–21, 9-21 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply