MAY 24 TH விளையாட்டு போட்டிகள்
டென்னிஸ்
ஜார்ஜியாவில் சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி, பிரிட்டனின் ஒயிட்ஹவுஸ், டாம் ஹேண்ட்ஸ் ஜோடியை சந்தித்தது.58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
பாட்மிண்டன்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்,'சூப்பர்500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரான்சின் டோமா ஜூனியர் போபோவ் மோதினர். முதல் செட்டை 24-22 என போராடி கைப்பற்றினார்., 3வது செட்டில் எழுச்சி கண்ட ஸ்ரீகாந்த்22,20 என போராடி தன்வசப்படுத்தினார். ஒரு மணிநேரம்,14 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்ரீகாந்த் 24-22, 17-21, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
துப்பாக்கி சுடுதல்
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் ஜெர்மனியில்நடக்கிறது. பெண்களுக்கான ஸ்கீட் பிரிவு போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரைசா தில்லான்,116 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் ரைசா, 51 புள்ளியுடன், இரண்டாவது இடம் பெற்று. வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான50 மீ., ரைபிள்3 பொசிசன்ஸ் போட்டி தகுதிச்சுற்றில் இந்தியாவின் அட்ரியன் கர்மாகர்(588)4வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். பைனலில் பெரும்பாலான நேரத்தில்4வது இடத்தில் இருந்த அட்ரியன், கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட,446.6 புள்ளியுடன் மூன்றாவது இடம் பெற்று, வெண்கலம் வசப்படுத்தினார். இத்தொடரில் இவர் வென்ற இரண்டாவது பதக்கம் இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
0
Leave a Reply