இந்தியா - பாகிஸ்தான் சண்டையால் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மீண்டும் இன்று தொடக்கம்.
ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டி இந்தியாபாகிஸ்தான் சண்டையால் திடீரென ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. மேலும் முக்கியமான வெளி நாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிக்காக கடைசி கட்டத்தில் கிளம்புவது அணிகளின் சரியான கலவையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதைஎல்லாம் கணக்கு போட்டே சில அணிகள் தற்காலிகமாக மாற்று வீரர்களை சேர்த்துள்ளனர்.
இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன. 13லீக் மட்டுமே மிஞ்சியுள்ளது.. முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன. மற்ற 7 அணிகள் பிளே-ஆப்சுற்றின் 4 இடத்துக்கு மல்லுக்கட்டுகின்றன.
புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப்சுற்றுக்கு தகுதி பெறும். இதில் முதல் 2இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி காணும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும்.தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.
3வது,4வதுஇடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் தோற்கும் அணிவெளியேறும். வெற்றி பெறும் அணி,முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் இறுதிப்போட் டிக்கான 2வது தகுதி சுற்றில் சந்திக்கும். இந்த ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தும் அணி2-வதுஅணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
0
Leave a Reply