ஈட்டி எறிதலில் சொந்த தேசிய சாதனையை முறிடித்த நீரஜ் சோப்ரா.
16வது சீசன் டைமண்ட் லீக் தடகளம் 15 சுற்றுகளாக நடக்கிறது. நேற்று, கத்தார் தலைநகர் தோகாவில் 3வது சுற்று நடந்தது. இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ.,ஓட்டம்)என முதன் முறையாக 4 பேர் பங்கேற்றனர் .
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 27,கிஷோர் ஜெனா உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். முதல் வாய்ப்பில் 88.44 6. எறிந்த நீரஜ் சோப்ரா, 2வது வாய்ப்பை 'பவுல்' செய்தார். பின் எழுச்சி கண்ட இவர், 3வது வாய்ப்பில் 90.23 மீ.,எறிந்தார். இதன்மூலம் தனது சொந்த தேசிய சாதனையை முறிடித்தார்.
0
Leave a Reply