17th MAY .விளையாட்டு போட்டிகள்.
ஆசிய பீச் ஹேண்ட்பால் விளையாட்டு போட்டிகள்
ஆசியபீச்சாம்பியன்ஷிப் ஓமனில்ஹேண்ட்பால்தொடரின் 10 வதுசீசன்பெண்கள்பிரிவில்இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஹாங்காங் கள மிறங்கின. முதல் போட்டி யில் 0-2 என வியட்நாமிடம் தோற்ற இந்தியா, அடுத்து 1-2 என பிலிப்பைன்சிடம் வீழ்ந் தது. மூன்றாவது போட்டியில் 2-0 என்ற (20-17, 20-17) செட் கணக்கில் இந்திய அணி, ஹாங்காங்கை சாய்த்தது.
அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் 3 போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. முடிவில் 6 போட்டியில் 1 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
கால்பந்து
19 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் அருணாச்சல பிரதேசத்தில், 7வது சீசன் ,இந் தியா, 'நடப்பு சாம்பியன்' வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, பங்கேற்ற 2 போட்டியிலும் வென்று, 6 புள்ளியுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னே றியது. இதில் நேற்று 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த மாலத்தீவு அணியை எதிர்கொண் டது.
போட்டியின் 22 நிமி டத்தில் இந்திய வீரர் ஓமங் டோடும் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக் கில் வெற்றி பெற்று பைன லுக்கு முன்னேறியது.நாளை நடக்கும் பைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோது கின்றன.
டென்னிஸ்,
பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர் சுலோவாகியாவில் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரார்த்தனா, நெதர் லாந்தின் ஹர்டோனோ அரியானே ஜோடி, உக் ரைனின் வலேரியா, ரஷ் யாவின் எலினா பிரிதன்கினா ஜோடியை எதிர் கொண்டது.
முதல் செட்டை பிரார்த் தனா ஜோடி 6-3 என கைப்பற்றியது. அடுத்த செட்டில் ஏமாற்றிய இந்த ஜோடி 3-6 என கோட்டை விட்டது. பின் நடந்த 'சூப் பர் டை பிரேக்கரில்' 11-9 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம் 43 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பிரார்த்தனா ஜோடி 6-3, 3-6, 11-9 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
0
Leave a Reply