25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சென்னை டென்னிசில் ராம்குமார்-மைனேனி காலிறுதிக்கு முன்னேறியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சென்னை டென்னிசில் ராம்குமார்-மைனேனி காலிறுதிக்கு முன்னேறியது.

டென்னிஸ் 

ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர்  சென்னையில் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, பெல்ஜியத்தின் கிம்மர் கோப்ஜான்ஸ், துருக்கியின் எர்கி கிர்கின் ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய ராம்குமார், மைனேனி ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. 

மும்பையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரியா பாட்யா ஜோடி, ஜப்பானின் ஹோண்டமா, ஒகமுரா ஜோடியை எதிர் கொண்டது.

முதல் செட்டை 5-7 என போராடி இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-2 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் அசத்திய இந்திய ஜோடி 10-7 என வென்றது. முடிவில் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரியா ஜோடி 5-7, 6-2, 10-7, என்ற, கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்தது.  

டேபிள் டென்னிஸ்  

சிங்கப்பூர் ஸ்மாஷ்' சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில்,ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-6', இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தக்கார் ஜோடி, ஹாங்காங்கின் வாங் சுன் டிங், இயு குவான் ஜோடியை எதிர் கொண்டது. இதன் முதல் செட்டை 11-5 என வசப்படுத்திய இந்திய ஜோடி, அடுத்த செட்டை 11-8 என வென்றது.தொடர்ந்து ,இந்திய ஜோடி, மூன்றாவது செட்டை 11-6 என கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News