விளையாட்டு போட்டிகள் FEBRUARY 9TH
கால்பந்து
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, கோல்கட்டா வில் நடந்த லீக் போட் டியில் ஈஸ்ட் பெங்கால், சென்னை மோதின. ஆட்டநேர முடிவில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
டென்னிஸ்
டில்லி ஓபன் சேலஞ்சர் (பிப். 10-16) ஒற்றையர் பிரதான சுற்றில் பங்கேற்க இந்தியாவின் சசிகுமார் முகுந்த், ராம்குமார் ராமநாதன், கரண் சிங்கிற்கு 'வைல்டு கார்டு' அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட்டில், தேசிய விளையாட்டு 38வது சீசன் .
போல் வால்ட்.
தமிழகத்தின் பவித்ரா வெங்கடேஷ் ,பெண்களுக்கான 'போல் வால்ட்' பைனலில், 3.95 மீ., தாண்டி தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீராங்கனை பரானிகா இளங்கோவன் (3.90 மீ.,) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். கேரளாவின் மரியா ஜெய்சனுக்கு (3,90 மீ.,) வெண்கலம் கிடைத்தது.
நீளம்தாண்டுதல்
தமிழகத்தின் ஸ்ரீராம் விஜயகுமார் ,ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் 7.70 மீ., தாண்டி வெள்ளி வென்றார். உ.பி.,யின் ஷாநவாஸ் கான் (7.70 மீ.,), கேரளாவின் அனுராக் (7.70 மீ.,) முறையே தங்கம், வெண்கலம் கைப்பற்றினர்.
வட்டு எரிதல்
ஹரியானாவின் சீமா, பெண்களுக்கான வட்டு எறிதல் பைனலில் ,52.70 மீ., எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை டில்லியின் பாவனா யாதவ் (52.70 மீ.,), பஞ்சாப்பின் அமானத் கம் போஜ் (52.70) வென்றனர்.
செஸ்
ஜெர்மனியின் கீமர் ,இந்தியாவின் குகேஷ் மோதிய பிரீஸ்டைல் தொடரின் (ஜெர்மனி) 7வது சுற்று 'டிரா' ஆனது. குகேஷ் 3.0 புள்ளிகளுடன் (6 'டிரா', ஒரு தோல்வி) 7வது இடத்தில் உள்ளார்.
ஓட்டப்பந்தயம்
ஓட்டத்தின் பைனலில் பெண்களுக்கான 10,000 மீ., பந்தய துாரத்தை 33 நிமிடம், 33.47 வினாடியில் கடந்த மகாராஷ்டிராவின் சஞ்சி வானி யாதவ் தங்கம் வென்றார்.
ஓட்டத்தின் பைனலில் ஆண்களுக்கான 10,000 மீ., இமாச்சல பிரதேசத்தின் சவான் பார்வல் (28 நிமிடம், 49.93 வினாடி) தங்கம் வென்றார்.
டில்லியின் சந்தா பெண்களுக்கான 1500 மீ., ஓட் டத்தின் பைனலில் (4 நிமிடம், 17.74 வினாடி) தங்கம் வென்றார்.
0
Leave a Reply