இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி வேர்ல்டு டூர் பாட்மின்டன் பைனல்ஸ் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
நேற்று பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர்சீனாவின் ஹாங்சு நகரில் துவங்கி,. ஆண்கள் இரட்டையர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள்லீக் முறையில் நடக்கின்றன. இம்முறை ஆண்கள் இரட்டையரில், இந்தியா சார்பில் உலகத் தர வரிசையில் 'நம்பர்-3' ஆக உள்ள சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டிஜோடி பங்கேற்கின்றனர்.
'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய ஜோடி, நேற்று தனது முதல் போட்டியில் 6வது இடத் திலுள்ள, பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளி வென்ற சீனாவின் லியாங் வெய், வாங் சங் ஜோடியை எதிர்கொண்டது. இந்திய ஜோடி 12-21, 22-20, 21-14 என முடிவில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply