'வார் 2' ஆக., 14ல் ரிலீஸாகிறது.
ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன், கியாரா அத்வானி நடித்துள்ள ஹிந்தி பட மான 'வார் 2' ஆக., 14ல் ரிலீஸாகிறது. ஹிருத்திக் கூறுகையில், "ஜூனியர் என்டிஆர் உடன் பணிபுரிந்தது நம்ப முடியாத அனுபவமாக உள்ளது. எப்படிப்பட்ட காட்சி என்றாலும் ஒத்திகை கூட தேவையில்லை, ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார். இது என்னை ஆச்சர்யப்படுத்தியது. அவரின் நடனத்தையும் பார்த்து அசத்து போய் இருக்கிறேன். அவர் மூலம் இந்தப்படம் எனக்கு ஒரு கற்றல் அனுபவத்தை தந்தது" என்றார் ஹிருத்திக்.
0
Leave a Reply