'பகீரா கிப்லிங்கி" ஜம்பிங் ஸ்பைடர் .
உலக அளவில் ஏறத்தாழ 40 ஆயிரம் வகை சிலந்திகள் உள்ளது. சிலந்திகள் எல்லாம் உணவுக்காக பூச்சிகள், வண்டுகளை வேட் டையாடுகின்றன. அசைவம் உண்ணாத, தாவரங்களை உண்டு வாழும் ஒருசிலந்தி இருக்கிறது. அதன் பெயர் 'பகீரா கிப்லிங்கி. இந்த சிலந்தி தான் உலகத் தில் மாமிச உண்ணியாக இல்லாத சிலந்தி என அறியப்படுகிறது, இதற்கு ஜம்பிங் ஸ்பைடர் என்ற பெயரும் உள்ளது.
மத்திய அமெரிக்காவின் காடுகளில் காணப்படும் இந்த சிலந்தியின் உணவு என்பது அகாசியா என்ற தாவரங்கள் தான். இந்த தாவரங்கள் அவற்றின் இலைகளின் நுனியில் சிறிய, புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த ஒரு உணவை உருவாக்குகிறது. இதற்கு, பெல்டியன் உடல்கள் என்று பெயர். இதனை எறும்புகள் விரும்பி உண்ணும். இந்த எறும்புகள் எப்போதும் அகாசியா தாவர இலைகளில் உலா வருவதால் தாவரங்களை உண்ணும் விலங்குகள் இந்த தாவரத்தை நெருங்குவதில்லை.
, சின்னஞ் சிறிய இந்த பகீரா கிப்லிங்கி சிலந்தி எறும்புகளுக்கு பலியாகாமல் தந்திரமான முறையில், அகாசியா தாவரத்தின் இலை நுனியில் இருக்கும் பெல்டியன் உணவை தந்திரமாக உண்கின்றன. தாவரத்தில் ரோந்து செல்லும் எறும்புகள், பெல்டியன் உடல்களை உண்ண செல்லும் பாதைக்கு மாற்றாக, எறும்புகள் செல்லாத மரங்களின் பழமையான அகாசியா இலைகளின் முனைகளில், அதன் வீட்டை உருவாக்குகிறது. அங்கு பாதுகாப்பாக இருந்து கொண்டு எறும்புகளின் உணவை ருசி பார்த்து பசியை தீர்த்துக் கொள்கிறது.
0
Leave a Reply