ருசியை கூட்டும் சமையல் ஐடியாக்கள்
புளி சாதம் கிளறுவதற்குமுன் சூடான சாதத்தில்கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி கிளறவும். சிறிது மிளகு, வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்துப்பொடி செய்து புளிக் காய்ச்சலுடன் அந்தபொடியையும், தேவையானஅளவு தூவி கிளறவும். கமகம ருசியில் புளியோதரை கோயில் பிரசாதம் போல சாப்பிட ருசியாக இருக்கும்.
தேங்காய் சாதத்தில் வேர்க்கடலை மற்றும்பொட்டுக்கடலையை வறுத்து ஒன்று இரண்டாக பொடிசெய்து போட்டால் கூடுதல் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
கீரைகளுயுடன் பச்சை வேர்க்கடலையை தாளித்து,வேக வைத்து, தேங்காய் துருவலுடன் இதர சாமான்களையும் சேர்த்து கீரை சாதம் செய்தால் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி உண்பர்.
அவரக்காய், கத்தரிக்காய், பீன்ஸ் என்று எந்த பொரியல் செய்தாலும் நாலைந்து சின்ன வெங்காயம், சிறிது சீரகம் இரண்டையும் கரகரப்பாக அரைத்துப் போட்டு இறக்குங்கள். வாசனை கமகமவென இருக்கும். அதோடு தேங்காய் துருவல் போட வேண்டிய அவசியமும் இருக்காது
கொதிக்கும் தண்ணீரில் சிறிது வெந்த பாசிப்பருப்பை சேர்க்கவும். பிறகு பாம்பே ரவை, அரிசி ரவை அல்லது கோதுமை ரவையைப் போட்டு உப்புமா செய்தால் ருசியாக இருக்கும்.
0
Leave a Reply