ஒற்றை பெருமரமும், சிறகசைக்கும் வண்ணத்து பூச்சிகளும்
25.09.2022 ஞாயிறு மாலையில் M.V.பீமராஜா ஜானகிஅம்மாள்அறக்கட்டளை சார்பாக - நம் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனந்தாஸ் M.B. ராதா கிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு அவர்பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் இளம் சாதனையாளர்விருது 2022 வழங்கும் விழா நடைபெற்றது. நிர்வாகக்குழு உறுப்பினர்கள்விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .வாழ்நாள் சாதனையாளர் விருது இலக்கிய ஆளுமை திரு.வண்ணதாசன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்களைபார்ப்பதற்காகவே நகரில் உள்ள இலக்கிய மன்றங்கள் சார்ந்த அன்பர்கள்வந்திருந்தனர்.
இளம் சாதனையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மாணவச்செல்வங்கள் G.தமிழ் குமரன் மற்றும் ரத்தன் ஜெ ராஜா மிக மிகத்
திறமைசாலிகள் என்பதை நேரில் காணும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்கள் இருவரின் ஏற்புரையும் மிக்க அழகு.
ஐஸ்வர்யா முகுந்தன் சார், நரேந்திரகுமார் சார், ராதா மேம் உரையும் சிறப்பாக இருந்தது.சிறப்புரையாற்றிய நரேந்திர குமார் அவர்கள் சாதனையாளரின் பல்வேறு புத்தகங்களை வாசித்து முக்கியமான வரிகளை நமக்கு எடுத்துக்
கூறிய விதம் அருமை. வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவிருந்தினரின் தன்னடக்கம், நேர்மையான உரைவீச்சு, எண்ணங்களின்வெளிப்பாடு என அனைத்தும் மிக அழகாக அமைந்திருந்தது.
வண்ணதாசன் அவர்கள் உரையின் மூலம் அவர் மிகஎளிமையானவர், இயல்பாகப் பேசுபவர் என்று தெரிந்து கொண்டோம்.
1. அழைப்பிதழை வைத்துக் கொண்டே அதில் இடம்பெற்ற அந்த மரத்தைதானாகவும், அதில் இலைகளாய் தெரிந்த வண்ணத்துப் பூச்சிகளைபார்வையாளராகவும் உருவகித்து அவர் பேசியது சுவையாகவும், மனதைதொடுவதாகவும் இருந்தது.
2. அமாவாசை தினமான இன்று காலையில் தான் தன் முன்னோர்களைநினைவு கூர்ந்து அவர்களை வேண்டி வணங்கி வந்ததாகக் கூறினார்.
3. “நான் தாமிரபரணிக்காரன், அந்த தாமிரபரணி என்னோட ஆறு” என்று கம்பீரமாக கூறியது கவனம் ஈர்த்தது.
4. “நான் எழுதும் எழுத்துகள் எல்லாம் என்னுடையது அல்ல. என்முன்னோர்களுடையது.” முன்னோர்கள் என்று குறிப்பிட்டது -
புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், கி.ராஜ நாராயணன் மற்றும் தனது தந்தைதி.க.சிவசங்கரன்இவர்களைத்தான்.
5. “நான் 1962 ல் இருந்து எழுதிக் கொண்டு இருக்கிறேன். இதோ இப்போதும்என் எழுத்துப் பணி தொடர்கிறது. இந்த எழுத்துப் பணிக்காக தரப்பட்டவிருதை ஏற்றுக் கொள்கிறேன். இது மேலும் மேலும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கிறது. ஆம் நேற்று எழுதினேன். இன்று எழுதிக்கொண்டிருக்கிறேன். நாளையும் எழுதுவேன் என்று கூறினார்.”
6, “இந்த நிறைந்த சபையில் நானும் நிறைந்து இருக்கிறேன்”. என்றுபெருமையுடன் அனைத்தையும் அத்தனை சுவையாக கூறி நிறைவுசெய்தார்”
மகிழ்ச்சி FM சார்பில் பள்ளித் தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்களுக்கு நல்மாமணி விருது கொடுத்ததில் பெருமை அடைந்தோம்.
ஆனந்தி அவர்களின் நன்றி உரை மிக வெளிப்படையாகவும் உணர்வுபூர்வமாகவும் அமைந்து,அனைவர் மனசையும் சாரலாய் தொட்டு விட்டுச்சென்றது. உமா சங்கர் அவர்களின் ஒருங்கிணைப்பு மிகச் சிறப்பு.விழா ஏற்பாடுகளை ஆனந்தா கல்விக்குழுமம் மிகச் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தது. சரியான நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு குறிப்பிட்டநேரத்தில் நிறைவு பெற்றது பாராட்டும்படியாக இருந்தது.
0
Leave a Reply