குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி பள்ளியின் குழந்தைகள் தின விழா 12.11.2022 சனிக்கிழமை அன்று ஆனந்தா கார்டனில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
*சிறப்பு விருந்தினராக ஏ.கே.டி.ஆர் கல்லூரி முதல்வர் டாக்டர். ஜமுனா மற்றும் அறுசுவை ஆற்றல் நிறுவனர்.சரண்யா தேவி அவர்களும் கலந்து கொண்டார்கள். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித்தலைமை ஆசிரியர் திருமதி. ஜெய பவானி அவர்கள் வரவேற்றுப் பேசினார்கள். பள்ளித் தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தினார்கள்.
*எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் மாறுவேடப்போட்டிகளில் சிறப்பாக பங்கேற்றார்கள். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நாகரீக நடை நடந்தும், உற்சாகத்துடன் கலந்து கொண்டும் அரங்கத்தை மேலும் அலங்கரித்தார்கள்.
டாக்டர். ஜமுனா அவர்கள் தாய், தந்தை, பெரியோர் அனைவரையும் போற்றி வணங்க வேண்டும் என்று கூறினார்கள். திருமதி சரண்யா தேவி அவர்கள் பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளிடம் நேர்மறை சிந்தனைகளை பரவலாக்க வேண்டும் என்று பேசினார்கள்.எழுத்தாளார். ரஜினி பெத்துராஜா அவர்கள் மாணவச்செல்வங்களை மகிழ்வுடன் வாழ்த்தினார்கள்.
பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் பெற்றோர்கள் மிக அன்பாக, அழகாக, உற்சாகமாக விழாவினைப் பற்றிய பின்னூட்டம் கொடுத்தார்கள். மாறுவேடப் போட்டியில் வெற்றி பெற்றமாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினார்கள். நடை அலங்காரத்தில் கலந்து கொண்ட பெற்றோர் அனைவருக்கும் பள்ளித் தாளாளர். ஆனந்தி அவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தார்கள்.
ஆசிரியர் முத்துலட்சுமி நன்றியுரை கூற, மொத்தத்தில் விழா மிக இனிமையாக, மகிழ்வாக நிறைவுபெற்றது.
0
Leave a Reply